ஈஷர் மோட்டார்ஸ். இந்தியாவின் பிரீமியம் ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களைத் தயாரிக்கும் முன்னணி கம்பெனி.
ராயல் என்ஃபீல்ட் பிராண்ட் ஈஷர் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது தான். இந்தியாவின் பிரீமியம் ரக (250 சிசிக்கு மேல்) இருசக்கர வாகன சந்தையில், ஒரு கணிசமான பங்கை வைத்திருக்கும் கம்பெனி ஈஷர் மோட்டார்ஸ்.
இந்த கம்பெனி பங்கின் விலை இன்று ஒரே நாளில் 9.9 % வரை அதிகரித்து இருக்கிறது. ஏன்? என்ன காரணம்? இந்த கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் எப்படி வந்திருக்கின்றன? என்பதை எல்லாம் பார்ப்போம்.
பங்கு விலை ஏற்றம்
ஈஷர் மோட்டார்ஸ் கம்பெனியின் பங்கு 1:10 என்கிற விகிதத்தில் பிரித்து இருக்கிறார்கள். அதாவது ஒரு பங்கை 10 பங்காகப் பிரித்து இருக்கிறார்கள். இப்படி பங்கை பிரிக்க கடந்த ஜூன் 2020-லேயே கம்பெனியின் இயக்குநர் குழு அனுமதி கொடுத்து இருந்தது. 1:10 பங்கு பிரிப்புக்குப் பின், ஈஷர் மோட்டார்ஸ் கம்பெனியின் முக மதிப்பு 10 ரூபாயாக இருந்தது, தற்போது 1 ரூபாயாக குறைந்து இருக்கிறது.
வியாபாரம் அதிகரிக்கும்
இந்த ஸ்டாக் ஸ்பிலிட் நடவடிக்கை உடன், சில தரகு நிறுவனங்கள், ஈஷர் மோட்டார்ஸின் டிமாண்ட், இந்தியாவின் செமி அர்பன் & கிராம புறங்களில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. வாகனங்களுக்கான புக்கிங்களும், கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் பிரச்சனை எழுவதற்கு முன் இருந்த அளவுக்கு வந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே பங்கு விலை இன்று ஒரே நாளில் சுமாராக 9.9 % அதிகரித்து இருக்கிறது.
ஈஷர் மோட்டார்ஸ் பங்கு விலை
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 2,170 ரூபாய்க்கு நிறைவடைந்ததாகச் சொல்கிறது மணி கண்ட்ரோல் வலைதளம். இன்று காலை 2,199 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 2,387 ரூபாய் வரைத் தொட்டு இருக்கிறது. ஆக முந்தைய் நாளின் குளோசிங் விலையில் இருந்து கணக்கிட்டால் 9.9 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது ஈஷர் மோட்டார்ஸ் பங்குகள்.
ஜூன் 2020 காலாண்டு முடிவுகள்
இந்த ஜூன் 2020 காலாண்டில் ஈஷர் மோட்டார்ஸ் 55 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கணக்கு காட்டி இருக்கிறது. கடந்த ஜூன் 2019-ல் 452 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருந்தது. அதே போல வருவாய் ஜூன் 2019-ல் 2,382 கோடி ரூபாயாக இருந்தது, இந்த ஜூன் 2020-ல் 818 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications