பொதுத் தேர்தல் முடிவுகள்: பங்குச்சந்தையில் 3 வகையில் பாதிக்கும்.. முதலீட்டாளர்களே இதை கவனிங்க..!

டெல்லி: ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை அங்கே அமைந்திருக்கும் அரசை பொறுத்தது. எனவே ஒரு நாட்டின் தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் பங்குச்சந்தையில் ஏற்றம், இறக்கம் என இரண்டையுமே காண முடியும்.

இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம், கணிப்புகள் ஆகியவற்றை பொறுத்து நாம் தற்போதில் இருந்தே பங்குச்சந்தைகளில் மாற்றங்களை காண முடிகிறது.

பொதுத் தேர்தல் முடிவுகள்: பங்குச்சந்தையில் 3 வகையில் பாதிக்கும்.. முதலீட்டாளர்களே இதை கவனிங்க..!

வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் பங்குகளை விற்பனை செய்வதால் பங்குச்சந்தை சரிவை கண்டது. முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர். இந்தியாவில் பொது தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளி வர இருக்கின்றன. அதுவரை பங்குச்சந்தைகளில் நாம் ஏற்ற இறக்கங்களை காண முடியும்.

தற்போது வரை நடைபெற்று முடிந்த தேர்தலை பார்க்கும்போது இந்தியாவில் இதுவரை 66.9% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையிலும் தேர்தல் முடிவுகள் தொடர்பான கணிப்புகள் அடிப்படையிலும் பங்குச்சந்தையில் தாக்கங்களை காண முடிகிறது.

தேர்தலை பொறுத்தவரை பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது, பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது ஆகிய மூன்று முடிவுகளுக்கு வாய்ப்பிருக்கிறது.

பாரதி ஜனதா கட்சி பெறக்கூடிய வாக்கு சதவிகிதம் மற்றும் பாரத ஜனதா கட்சி பெறக்கூடிய இடங்களின் எண்ணிக்கை ஆகியவையும் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கப் போகின்றன. அந்த வகையில் பங்குச்சந்தையில் மூன்று விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி: தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சுமார் 300 இடங்களில் வெற்றி பெறுகிறது. மோடியே மீண்டும் பிரதமராக நீடிக்கிறார் எனும் போது பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்கிறது நோமுரா தரகு நிறுவனம்.

பங்குச்சந்தை பாசிட்டிவாக எதிர்வினையாற்றும் அதாவது பங்குச்சந்தை ஏற்றம் காணும். குறிப்பாக நிதித்துறை மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளின் மதிப்புகள் பெருமளவில் உயரக்கூடும் என தரகு நிறுவனங்களின் கணிப்பு தெரிவிக்கிறது. அதே வேளையில் ஐடி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த பங்குகள் சற்றே சரியும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி: ஒரு வேளை ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி பெறவில்லை. கூட்டணி கட்சிகளின் உதவியோடு தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்ற சூழலில் பங்குச்சந்தை சரியும் என நோமுரா அனலிஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யக்கூடும் இதனால் பங்குச்சந்தை சரிவடைவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பாக உள்நாட்டு துறை சம்பந்தப்பட்ட தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் பொதுத்துறை பங்குகள் பெருமளவில் விற்கப்படலாம் என்றும் வங்கி மற்றும் மருந்து துறை சார்ந்த பங்குகள் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி வெற்றி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறுகிறது எனில், கூட்டணி ஆட்சியின் தொடக்க காலத்தில் பங்குச்சந்தை சரிவடையும் வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ துறை மற்றும் ஐடி நிறுவன பங்குகள் சற்றே உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. உள்கட்டமைப்பு மற்றும் பொதுத்துறை பங்குகள் பெருமளவில் விற்கப்படலாம் என்றும் தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+