இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திலும் சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தருகின்றன. அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்று Elitecon International பங்கு விலை தொடர்ந்து மூன்றாவது வர்த்தக அமர்வாக அப்பர் சர்க்யூட்டை எட்டி ரூ.43.52-ஐ அடைந்தது. வலுவான வாங்குதல் உந்துதலே இதற்குக் காரணம். பிஎஸ்இ-யில் இந்த ஸ்மால்கேப் பங்கு 5% லாபத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
பங்கின் இந்த ஏற்றத்திற்கு வலுவான வர்த்தக அளவுகளே பக்கபலமாகின. கடந்த ஏப்ரல் 17 அன்று சுமார் 22 லட்சம் ஈக்விட்டி பங்குகள் கைமாறின. இது Elitecon International-ன் ஒரு மாத சராசரி 15 லட்சம் பங்குகளுடன் ஒப்பிடுகையில் அதிகம்.FMCG மற்றும் புகையிலை உற்பத்தி நிறுவனமான Elitecon International-ன் இந்த சமீபகால லாபங்களுக்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் Bozza Tobacco (PTY) நிறுவனத்திடமிருந்து சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்களை விநியோகிக்க நீண்டகால ஒப்பந்தம் அதற்கு கிடைத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, Red and Black, B&W, Cape, Ossum, Golden Flake போன்ற புகழ்பெற்ற பிராண்ட் சிகரெட்டுகள் உள்ளிட்ட புகையிலை பொருட்களை நிறுவனம் விநியோகிக்கும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.202 கோடி. இந்த ஆர்டரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்திட வேண்டும்.
Elitecon International பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 18%க்கும் மேல் சரிந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு இதுவரை (YTD) 57% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 72% குறைந்திருந்தபோதும், ஒரு வருடத்தில் 12%க்கும் மேல் உயர்ந்துள்ளது.
இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில், Elitecon International பங்குகள் 3,200%க்கும் அதிகமான மல்டிபேக்கர் வருவாயை வழங்கியுள்ளன. வெள்ளி பிற்பகல் 12:45 மணி நிலவரப்படி, பிஎஸ்இ-யில் இதன் பங்கு, ரூ.43.52 என 5% அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமானது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
