எலைட்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு விலை புதன்கிழமை அன்று 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட்டை எட்டியது. இந்த மல்டிபேக்கர் பங்கானது தொடர்ந்து நான்கு தினங்களாக அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இதோடு ஐடி சேவை துறை பங்குகள் மீதான நம்பிக்கை குறைந்து வரும் வேளையில், சர்வதேத பொருளாதார வளர்ச்சி தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் வங்கி பங்குகளும் தடுமாற்றத்தில் உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மாற்று முதலீட்டு ஐடியாவையும், மாற்று நிறுவன தேர்வுகளையும் தேடி வருகின்றனர்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் நான்கு தினங்களாக அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகி முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்த எலைட்கான் இன்டர்நேஷனல் பங்குகள் இன்று 4.97 சதவீதம் உயர்ந்து ரூ.173.10 ஆக வர்த்தகமாகின. கடந்த ஐந்து தினங்களில் இந்த மல்டிபேக்கர் பங்குகள் 21 சதவீதம் உயர்ந்துள்ளன. இதேபோல் ஆறு மாதங்களில் 350 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, நீண்டகால முதலீட்டாளர்களின் முதலீட்டை இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த உயர்வுக்கான காரணம் என்ன? அக்டோபர் 1 அன்று, எலைட்கான் இன்டர்நேஷனல், லேண்ட்ஸ்மில் அக்ரோ பிரைவேட் லிமிடெட் (Landsmill Agro Private Limited) மற்றும் சன்பிரிட்ஜ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் (Sunbridge Agro Private Limited) ஆகிய இரண்டு நிறுவனங்களில் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
எலைட்கான் இன்டர்நேஷனல், லேண்ட்ஸ்மில் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 55 சதவீத பங்குகளை ரூ.52.85 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், லேண்ட்ஸ்மில் அக்ரோவின் 51.48 லட்சம் பங்குகள், ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10 ஆகவும், ஒரு பங்கு ரூ.102.67 ஆகவும் வாங்கப்பட்டன.
அக்டோபர் 1 அன்று வெளியிட்ட ஒழுங்குமுறை அறிக்கையில், எலைட்கான் இன்டர்நேஷனல் "இந்த கையகப்படுத்துதல்களின் முக்கிய நோக்கம், எலைட்கான் நிறுவனத்தின் FMCG வணிகத்தை விரிவுபடுத்தவும், பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்யவும் முடிவின் ஒரு பகுதியாகும். ஏனெனில், நிறுவனம் ஏற்கனவே விவசாய பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது." என விளக்கியுள்ளது.
எலைட்கான் இன்டர்நேஷனல், சன்பிரிட்ஜ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 51.65 சதவீத பங்குகளை, அதாவது 98.77 லட்சம் பங்குகளை ரூ.128.40 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
அடுத்த 12 மாதங்களுக்குள் மீதமுள்ள பங்குகளையும் வாங்கி, இரண்டு நிறுவனங்களின் முழு உரிமையையும் பெற திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications