இந்திய பங்குச்சந்தைகள் டிரம்ப் வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் சரிவில் இருக்கிறது. இத்தகைய சூழலில் சந்தை சரிவுகளுக்கு மத்தியிலும், ஆட்டோமொபைல் இ-சில்லறை வணிகத்திற்கான தீர்வுகளை வழங்கும் IZMO என்ற ஸ்மால் கேப் நிறுவனம், தொடர்ந்து லாபகரமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும், IZMO பங்கின் விலை 408 ரூபாயில் இருந்து 706 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சுமார் 73% லாபத்தை ஈட்டியுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 84% ஏற்றம் கண்டு புது சாதனை படைத்துள்ளது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பிடித்தமான ஸ்மால் கேப் பங்காக இது மாறியுள்ளது. இதற்கு காரணம் இந்நிறுவனம் அண்மையில் தான் தங்களின் சிறப்புப் பிரிவான இஸ்மோமைக்ரோ என்ற புதிய சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் பேக்கேஜிங் தளத்தை அறிமுகப்படுத்தியது. இது 32 சேனல் ஃபைபர் உள்ளீடு மற்றும் வெளியீட்டை ஆதரிக்கிறது.
இந்த முன்னேற்றம் குறித்து பேசி இருக்கும் இஸ்மோ மைக்ரோவின் செயல் இயக்குநர் தினநாத் சோனி, உலகளவில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இந்தத் திறனை வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் முதன்முதலாக நாங்கள் இதனைச் சாதித்தது எங்களுக்குப் பெருமை. இது துல்லியமான பேக்கேஜிங்கில் எங்களின் பல வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்கப்படுத்துகிறது என கூறியுள்ளார்.
உலகளாவிய சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் தொழில்துறையில் நான் முன்னணி நிறுவனமாக மாறி இருக்கிறோம் என கூறும் அவர் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த பயன்பாடுகளுக்கு அதிக செயல்திறன் தேவைப்படும் இந்தச் சூழலில், எங்களின் கண்டுபிடிப்பு எதிர்கால உள்கட்டமைப்பிற்கு உதவும் என்றார்.
இஸ்மோ பங்கின் விலை கடந்த ஆறு மாதங்களாக, நடப்பு மாதத்தையும் சேர்த்து, தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இது 175% லாபத்தை ஈட்டியுள்ளது. ஸ்மால் கேப் பங்குகள் அதிக ஏற்ற இறக்கங்களைக் கண்டபோதும், இஸ்மோ பங்கு எந்த இறக்கமும் இல்லாமல் தொடர்ந்து ஏற்றத்தையே தக்க வைத்து கொண்டுள்ளது.
ரூ. 20 என்ற அளவில் இருந்த இந்த பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 890% மற்றும் ஐந்து ஆண்டுகளில் 3,430% உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,020 கோடியாக உள்ளது. தற்போதைய பங்கு மதிப்பு ரூ.738 ஐத் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ.229 என குறைந்த இந்த பங்கு தற்போது வலுவான மீட்சியை கண்டுள்ளது.
குறுகிய காலத்தில் பங்கின் விலையில் ஏற்பட்ட இந்த அபரிமிதமான உயர்வு, முதலீட்டாளர்களின் செல்வத்தை கணிசமாகப் பெருக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதில் 1 லட்சம் முதலீடு செய்த ஒரு முதலீட்டாளருக்கு தற்போது அதன் மதிப்பு ரூ.35.30 லட்சமாக உயர்ந்திருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications