பங்குச் சந்தையில் பென்னி பங்கு ஆன எபிக் எனர்ஜி (EPIC ENERGY)பங்குகள் வெறும் 137 நாட்களில் ஒரு பங்கிற்கு ரூ.5.97 முதல் ரூ.47.25 வரை உயர்ந்து அதன் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. கடன் இல்லாத மல்டிபேக்கர் பங்கு ஆன இது அதன் வர்த்தகத்தில் தொடர்ச்சியாக மேல் சுற்றை எட்டி வருகிறது. பங்கு ஒன்றுக்கு 5.97 என்ற 52 வாரக் குறைந்த விலையிலிருந்து 691.5 சதவீத மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது. இது வெறும் 137 நாட்களில் அதாவது 4 மாதங்கள் 14 நாட்களில் இந்த வளர்ச்சியை வழங்கியது.
இன்றைய வர்த்தகத்தில் எபிக் எனர்ஜி பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூ.46.33-ல் இருந்து ஒரு பங்கின் மதிப்பு ரூ.47.25-க்கு 2 சதவீத அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்யப்பட்டுள்ளது. பங்கு அதன் 52 வார உயர்ந்த அளவாக ரூ.47.25 என்ற புதிய அளவை எட்டியுள்ளது. மேலும் இது மல்டிபேக்கர் வருவாயை 691.5 சதவீதமாக அளித்துள்ளது. அதுவும் அதன் 52 வாரங்களில் குறைந்தபட்சமாக 5.97 ரூபாயிலிருந்து வெறும் 137 நாட்களில் இந்த வருமானத்தை அளித்துள்ளது.

எபிக் எனர்ஜி லிமிடெட் கோயம்புத்தூரில் எலக்ட்ரிக் வாகன சார்ஜர்களுக்கான அதிநவீன உற்பத்தி வசதியை நிறுவ ஃபென்ஃபியோ ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் உடன் கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டு முயற்சியானது நாட்டில் வேகமாக விரிவடைந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தை மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்புக்கான வளர்ந்து வரும் தேவை ஆகியவற்றிற்கான சேவையை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய உற்பத்தி அலகுகளில் ஆண்டுக்கு 15,000 சார்ஜர்களின் ஆரம்ப உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும் எனவும், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா முழுவதும் செயல்பாடுகளை அதிகரிக்கவும், மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. எபிக் எனர்ஜியின் இந்த நடவடிக்கையானது பெய்னின் இந்திய எலெக்ட்ரிக் வாகன அறிக்கை 2023 இன் கீழ் நிறுவனம் இந்த கூட்டணியை அமைத்துள்ளது. இது விரைவான சார்ஜிங் தீர்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவையின் காரணமாக, குறிப்பாக போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகளில் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை நோக்கி குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
இந்திய எலக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜிங் சந்தையானது 2030 ஆம் ஆண்டுக்குள் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது அரசாங்க சலுகைகள், வரிச் சலுகைகள் மற்றும் பொது-தனியார் கூட்டணிகளால் இருக்கும் என்று கூறப்படுகிறது. 50%க்கும் அதிகமான CAGR உடன், மின்சார வாகனங்களுக்கான இந்தியாவின் மாற்றத்தை விரைவுபடுத்துவதில் வேகமாக சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்நிறுவனம் நிவா ஈகோடெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே 35 மெகாவாட் சோலார் பூங்காவை உருவாக்கியது. எபிக் எனர்ஜியின் துணை நிறுவனமான எபிக் ரினுவெபில் ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் இந்த திட்டத்தை முன்னின்று நடத்துகிறது. அதன் திறனை இரண்டு ஆண்டுகளில் 140 MWp ஆக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிவா, சோலாப்பூர் சோலார் திட்டங்களில் அதன் அனுபவத்துடன், கூட்டாண்மைக்கு மதிப்புமிக்க நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறது.
அத்துடன் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குரூப் கேப்டிவ் ஓபன் அக்சஸ் அமைப்பின் கீழ் பூங்காவிற்குள் சோலார் ஆலைகளை அமைக்க எபிக் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நிறுவனங்களுக்கு அவற்றின் கார்பன் தடம் மற்றும் ஆற்றல் செலவுகளைக் குறைப்பதற்கான வழியை வழங்குகிறது. இந்த ஒத்துழைப்பு நிறுவனங்களின் ESG இலக்குகளை அடைவதில் எபிக்கின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
எபிக் எனர்ஜி நிறுவனம்
எபிக் என்பது இந்திய அரசாங்கத்தின் எரிசக்தி திறன் பணியகத்தால் ESCO ஆக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆற்றல் சேவை நிறுவனமாகும். எபிக் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆற்றல் சேமிப்பு மற்றும் பசுமை ஆற்றல் துறையில் உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.34.07 கோடி ஆக உள்ளது. ஜூன் 2024 நிலவரப்படி, நிறுவனம் கடனற்ற நிலையில் உள்ளது.இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி எபிக் எனர்ஜி பங்குகள் சுமார் 1.99% உயர்ந்து ரூ.47.25 ஆக விற்பனையாகி வருகிறது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications