இன்று பங்குச்சந்தை, நாணய சந்தை, பியூச்சர்ஸ் சந்தை ஆகிய அனைத்தும் ராம நவமி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கமாடிட்டி சந்தை காலை வர்த்தகம் மட்டுமே மூடப்பட்டு இருக்கும் நிலையில் மாலையில் வர்த்தகம் துவங்கும்.
இதன் மூலம் இன்று பெரும் பகுதி வர்த்தகங்கள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டுச் சந்தை அமைதியாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருக்கும். மேலும் ஏப்ரல் 22 முதல் அனைத்து சந்தைகளும் இயல்பாகத் தனது வர்த்தகத்தைத் துவங்கும்.
சென்செக்ஸ் குறியீடு
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவில் இருந்து மீண்டு 243.62 புள்ளிகள் சரிவில் 47,705.80 புள்ளிகளை அடைந்து நேற்றை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் பல MSME நிறுவனங்கள் பெறும் வர்த்தகத்தின் அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல் நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கொரோனா தொற்று பரவும் காரணமாக நாடு முழுவதும் தனது தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது.
டாப் 30 நிறுவனங்கள் பட்டியல்
மேலும் நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில், நெஸ்லே, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎப்சி, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்சிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் சரிவு அடைந்துள்ளது.
நிப்டி குறியீடு
மேலும் நிஃப்டி குறியீடு நேற்று காலை வர்த்தகம் துவங்கும் போது 250 புள்ளிகள் சரிவில் வர்த்தகத்தைத் துவங்கினாலும், வர்த்தக முடிவில் 63.05 புள்ளிகள் மட்டுமே இழந்தது 14,296.40 புள்ளிகளை அடைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை
இதைத்தொடர்ந்து எம்சிஎக்ஸ் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 0.92 சதவீதம் அதிகரித்து 47,829 ரூபாய்க்கும், வெள்ளி ஒரு கிலோ 0.64 சதவீதம் அதிகரித்து 68,760 ரூபாய் அளவில் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications