ஸ்மால்கேப் நிறுவனமான ஏராயா லைஃப்ஸ்பேசஸ், இணையதளங்கள், ஆப்ஸ் மற்றும் பிற டிஜிட்டல் பிளாட்பார்ம்களுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் எபிக்ஸ் கேஷ் லிமிடெட் (EbixCash Ltd).
இந்நிறுவனம் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவைகள் உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. துணை நிறுவனமான EbixCash நிறுவனத்தின் வளர்ச்சி, ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனத்துக்கு பெரிய ஆதாயத்தை கொடுத்துள்ளது.

ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் இன்று எபிக்ஸ்கேஷ் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி வலுவாக இருப்பதாக அறிவித்தது. இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை அடித்தது.
பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் ரூ.4.50 உயர்ந்து ரூ.94.75ல் முடிவுற்றது. வர்த்தம் முடியும்போது அப்பர்சர்க்கியூட் அளவிலிருந்து பங்கின் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.34 லட்சம் ஈட்டியிருந்தது. மேலும், கடந்த 2024 ஜூன் காலாண்டில் ரூ.96 லட்சமும், செப்டம்பர் காலாண்டில் ரூ.3 லட்சமும் நிகர லாபமாக இந்நிறுவனம் ஈட்டியிருந்தது. ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவன பங்குகளும் நடுத்தர கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு நல்ல மல்டிபேக்கர் வருமானம் கொடுத்துள்ளது. அதேசமயம் கடந்த சில மாதங்களில் இப்பங்கின் விலை சரிவு கண்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 18 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இப்பங்கின் விலை 57 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 390 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 10,300 சதவீதம் பெருக்கியுள்ளது. 2024 அக்டோபர் 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 52 வார உச்சமான ரூ.316.90ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications