இந்திய சந்தையில் சில பென்னி பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக மாறி முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபம் தந்துவிடும். அப்படி ஒரு பங்கினை தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம். 4 ஆண்டுகளிலேயே பல மடங்கு உயர்ந்து முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக மாற்றியுள்ளது இந்த நிறுவனம்.
எராயா லைஃப்ஸ்பேஸ் ( Eraaya Lifespaces) நிறுவனத்தின் துணை நிறுவனமான எபிக்ஸ் டெக்னாலஜிஸ், அலையன்ஸ் ஆஸ்திரேலியா இன்சூரன்ஸின் துணை நிறுவனமான ஜிடி இன்சூரன்ஸிடமிருந்து ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செய்தியைத் தொடர்ந்து, எராயா லைஃப்ஸ்பேஸ் பங்குகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், எராயா லைஃப்ஸ்பேஸ் ஒரு பங்கின் விலை ரூ. 0.72 இலிருந்து ரூ.46.48 ஆக உயர்ந்துள்ளது. இது இந்திய பங்குச்சந்தையில் 6,355% க்கும் அதிகமான லாபத்தைக் குறிக்கிறது. அதாவது 4 ஆண்டுகளுக்கு முன் இதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்கள் சுமார் ரூ. 64.55 லட்சம் லாபத்தை ஈட்டியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை முடிவில், எராயா லைஃப்ஸ்பேஸ் பங்கு விலை ரூ.46.18 ஆக முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த நிறுவனம் 6,313% க்கும் அதிகமான வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. ஆனால், கடந்த ஓராண்டில் பங்குகள் 61.81% சரிந்துள்ளன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை 60.12% சரிந்தாலும், கடந்த ஒரு மாதத்தில் 3.38% உயர்ந்துள்ளது.
பிஎஸ்இ இணையதள தகவல்படி, 2024 அக்டோபர் 7 அன்று பங்கு விலை ரூ. 316.90 ஆக உயர்ந்து, 52 வார உச்சத்தை எட்டியது. 2025 ஆகஸ்ட் 14 அன்று ரூ.39.99 ஆகக் குறைந்து 52 வார குறைந்தபட்ச நிலையை எட்டியது. 2025 செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 880.63 கோடியாக இருந்தது.
எராயா லைஃப்ஸ்பேஸ் பங்குகள் பல ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்குப் பல மடங்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளன. இந்த புதிய வணிக ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களும் ஆஸ்திரேலிய தரகு சேவைகளை மேம்படுத்தி, தங்களின் முக்கிய சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும்.
"இந்த ஒப்பந்தம், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் காப்பீட்டு நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான எங்கள் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது. ஜிடி இன்சூரன்ஸின் ஆழமான நிபுணத்துவமும், சன்ரைஸ் எக்ஸ்சேஞ்சின் சுறுசுறுப்பும் இணைந்து, தரகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சிறந்த சூழலை உருவாக்கும்" என்று எபிக்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் இயக்குனர் ஆஷிஷ் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
சன்ரைஸ் எக்ஸ்சேஞ்ச் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு B2B மின்னணு காப்பீட்டு விநியோக தளமாகும். இதை எபிக்ஸ் டெக்னாலஜிஸின் துணை நிறுவனமான எபிக்ஸ் ஆஸ்திரேலியா நிர்வகிக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications