நாட்டின் பிரபல ஆன்லைன் டெலிவரி வர்த்தக நிறுவனங்களான சோமெட்டோ, பிளிங்கிட் ஆகியவற்றின் உரிமையாளர் எட்டர்னல் நிறுவனம். இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களி்ன் உரிமையை (பங்கு மூலதனத்தை) 49.5 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு சோமெட்டோ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, உள்நாட்டில் தகுதி வாய்ந்த நிதிநிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கி 100 கோடி டாலர் திரட்ட ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து, இந்நிறுவனத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 50 சதவீதத்தை தாண்ட வழிவகுத்தது. சோமெட்டோ நிறுவனம் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் 100 கோடி டாலர் நிதி திரட்டியதையடுத்து, நிறுவனத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலதனம் 50 சதவீதத்தை தாண்டியது.

தற்போது அன்னிய பங்கு மூலதனத்துக்கு 49.5 சதவீத உச்சவரம்பு மற்றும் இந்தியருக்கு சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனமாக (ஐஒசிசி) இருப்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் தற்போதுள்ள உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இந்நிறுவன பங்குகளை வாங்க முடியாது. இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது, 2025 மார்ச் நிலவரப்படி, எட்டர்னல் நிறுவனத்தில் 44.8 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள்.
எட்டர்னல் நிறுவனம் அன்னிய முதலீட்டு உரிமையை 49.5 சதவீதமாக குறைத்தன் பின்னணியில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில், சோமெட்டோ நிறுவனம் உள்நாட்டு உரிமையை அதிரிக்க மற்றும் இந்தியருக்கு சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்படும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அடுத்து நிறுவனத்தில் அன்னிய பங்குமூலதனம் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தால், அதுவே ஒரு வணிகத்துக்கு தடைக்கல்லாக அமைந்து விடும்.
அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகளின்படி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மார்க்கெட்பிளேஸ் மாடலில் மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் செயல்படும் நிறுவனங்கள், விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு தளத்தை மட்டுமே வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பொருட்களை விற்பனைசெய்வது, பொருட்கள் கையிருப்பு வைப்பது மற்றும் சொந்தமான விநியோக நிலையங்கள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் நிறுவனத்தில் அன்னிய முதலீடு 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் இந்த தடைகள் பொருந்தாது. உதாரணமாக, ஃபர்ஸ்ட்க்ரை என்ற பெயரில் செயல்படும் பிரைன்பீஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட், தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பொருட்களுக்கான இந்தியாவின் சர்வசேனல் தளமாகும். இந்நிறுவனம் 49.5 சதவீத அன்னிய உரிமை வரம்பை வைத்துள்ளது. இந்நிறுவனம் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்கிறது மற்றும் அதன் சொந்த சரக்குகளை நிர்வகிக்கிறது. எட்டர்னல் இந்த நோக்கத்துக்காகத்தான் தனது நிறுவனத்தில் அன்னிய உரிமை வரம்பை 49.5 சதவீதமாக குறைத்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications