ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த நிறுவனமாக சோமேட்டோவின் தாய் நிறுவனமான எடர்னல் லிமிடெட் நிறுவனம் மாறியுள்ளது. எடர்னல் நிறுவனத்தின் கீழ் தான் சோமேட்டோ உணவு டெலிவரி நிறுவனமும், பிளிங்கிட் குயிக் காமர்ஸ் நிறுவனமும் செயல்படுகின்றன.
இந்த நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.7,200 கோடி மதிப்புள்ள 22.9 கோடி கூடுதல் பங்குகளை ஆகஸ்ட் மாதத்தில் வாங்கியுள்ளன. நுவாமா தரகு நிறுவன அறிக்கையின்படி, ஆகஸ்ட் இறுதியில் மியூச்சுவல் ஃபண்டுகள் 225.60 கோடி எடர்னல் பங்குகளை வைத்துள்ளன. இது ஜூலை மாதத்தில் வைத்திருந்த 202.70 கோடி பங்குகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். திங்கட்கிழமை வர்த்தகத்தில் எடர்னல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 323.10 என்ற அளவில் இருந்தது.

கடந்த சில காலாண்டுகளாக எடர்னல் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் 30 நிலவரப்படி, நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 21.6 சதவீதமாக உயர்ந்தது. இது மார்ச் 31 அன்று 19.4 சதவீதமாகவும், டிசம்பர் 31, 2024 அன்று 16.5 சதவீதமாகவும், செப்டம்பர் 30, 2024 அன்று 15.5 சதவீதமாகவும் இருந்தது.
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் எடர்னலில் செய்யும் முதலீடு அதிகரிப்பது பல போட்டிகளுக்கு மத்தியிலும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் நம்பிக்கை உயர்ந்திருப்பதையே காட்டுவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
எடர்னலின் சோமேட்டோவுக்கு போட்டியாக ஸ்விக்கி தன்னை விரிவாக்கம் செய்து வருகிறது அதே வேளையில் பிளிங்கிட்டிற்கு போட்டியாக இன்ஸ்டாமார்ட், செப்டோவும் விரிவாக்கம் செய்து வருகின்றன. சமீபத்தில், அமேசானினும் கூட குயிக் காமர்ஸ் பிரிவில் "அமேசான் நவ்" என்ற செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. பிளிப்கார்டும் கூட மினிட்ஸ் என்ற செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இப்படி சந்தையில் பல போட்டிகள் இருந்தாலும் எடர்னல் நிறுவன பங்கு வளர்ச்சியில் தான் இருக்கிறது. பிளிங்கிட் குயிக் காமர்ஸ் துறையில் சிறப்பாக செயல்படுகிறது, எனவே, எடர்னல் பங்குகளுக்கு ரூ 330 என்ற இலக்கு விலையுடன் 'வாங்கலாம்' பரிந்துரையை வழங்குகிறோம் என எம்.கே. நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் நிறுவனம், பலவீனமான நுகர்வு மற்றும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக உணவு டெலிவரி வளர்ச்சி குறைந்துள்ளது. அதேசமயம், குயிக் காமர்ஸ் வர்த்தகத்தின் லாபம் அதிகரித்து வருவதால் எடர்னல் பங்குகளுக்கு ரூ. 420 இலக்கு விலையுடன் 'வாங்கலாம்’ என்ற பரிந்துரையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications