பிளிங்கிட் யூஸ் பண்றீங்களா? அப்போ நீங்க தான் இதுக்கு காரணம்!! ஒரே நாளில் 15% உயர்ந்த பங்கு மதிப்பு

ஸோமாட்டோ எனப்படும் உணவு டெலிவரி நிறுவனமும் பிளிங்கிட் எனப்படும் குயிக்காமர்ஸ் நிறுவனமும் எடர்னல் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் தான் செயல்படுகின்றன. இந்த எடர்னல் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜூலை 22 ஆம் தேதியான இன்று ஒரே நாளில் எடர்னல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 15 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 311 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு இது ஆகும். இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. அதாவது நிஃப்டி 50இல் இடம்பெற்றிருக்கும் விப்ரோ, டாட்டா மோட்டார்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பிரதான நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி எடர்னல் நிறுவனம் சந்தை மூலதன மதிப்பில் முன்னிலை வகித்தது.

பிளிங்கிட் யூஸ் பண்றீங்களா? அப்போ நீங்க தான் இதுக்கு காரணம்!! ஒரே நாளில் 15% உயர்ந்த பங்கு மதிப்பு

காலை வர்த்தக தொடக்கத்தின் போதே எடர்னல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 15 சதவீதம் வரை உயர்ந்த 311 ரூபாய் என்றும் பின்னர் வர்த்தகம் முடிவடையும் போது 299 ரூபாய் என்ற அளவிலும் இருந்தது .நேற்றைய தினம் நிறுவனத்தின் ஜூன் வரையிலான காலாண்டு நிதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ஸோமாட்டோவை விட பிளிங்கிட்டின் செயல்பாடும் வருமானமும் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது.

இது எடர்னல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 52 வார கால உச்சத்தை எட்டுவதற்கு காரணமாக இருந்தது. ஜெஃப்ரீஸ் என்ற தரகு நிறுவனம் எடர்னல் பங்கினை வாங்கலாம் என்றும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 400 ரூபாய் வரை எட்ட கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. ஜூன் மாத காலாண்டு முடிவுகள் கலவையாக இருந்தாலும் குயிக்காமர்ஸ் பிரிவில் இந்த நிறுவனம் தீவிரமாக செயல்பட போகிறது என்ற உறுதியை நிறுவனத்தின் தலைமை தந்து இருக்கிறது, எனவே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கும் என கூறியிருக்கிறது.

பிளிங்கிட் யூஸ் பண்றீங்களா? அப்போ நீங்க தான் இதுக்கு காரணம்!! ஒரே நாளில் 15% உயர்ந்த பங்கு மதிப்பு

எம்கே குளோபல் நிறுவனம் முதல் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கின்றன என்றும் இந்த நிறுவனத்தின் கிராஸ் ஆர்டர் வேல்யூ என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 140% உயர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 330 ரூபாய் வரை உயரும் என எம்கே குளோபல் நிறுவனம் கூறியிருக்கிறது. இதனை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது.

பிளிங்கிட்டின் செயல்பாடு பாசிட்டிவான ஒரு பார்வையை தருகிறது என கூறி இருக்கிறது ஜே எம் பைனான்சியல் நிறுவனம். இந்த நிறுவன பங்கினை வாங்கலாம் என்ற குறியீட்டில் வைப்பதாக தெரிவித்திருக்கிறது. அடுத்த இரண்டு மூன்று காலாண்டுகளில் நிறுவனம் படிப்படியாக குயிக்காமர்ஸ் பிரிவில் வேகமான வளர்ச்சியை அடைந்து விடும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் எடர்னலின் பங்கு மதிப்பு 33 சதவீதமும் 5 ஆண்டுகளில் 160 சதவீதமும் உயர்ந்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+