இன்று (23 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.16 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.18 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.79 % ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது எனலாம்.

அதே போல ஆசிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆசியாவின் முக்கிய நாட்டுப் பங்குச் சந்தைகளில் தைவானின் தைவான் வெயிடெட் 0.14 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதே போல தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 0.24 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இன்று ஆசிய நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகளிலேயே, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தான், அதிகபட்சமாக 1.04 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 0.48 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஜப்பானின் நிக்கி 0.18 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் 0.28 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஹாங் காங் நாட்டின் ஹேங் செங் சந்தை 0.58 % ஏற்றத்தில் சந்தை வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
தென் கொரியாவின் கோஸ்பி சந்தை 0.24 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.40 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நம் இந்தியாவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இண்டெக்ஸ், காலை முதல் பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சுமாராக 150 புள்ளிகள் ஏற்றத்தில் நிலையாக, 40,708 புள்ளிகளிலேயே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
சென்செக்ஸ் இன்று காலை முதல் தற்போது வரை 40,558 முதல் 40,811 புள்ளிகளுக்குள்ளேயே சின்ன சினன் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications