இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா அட்ரசின் 50% இறக்குமதி வரி, முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய அச்ச உணர்வு காரணமாக, நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் தலா 1%க்கும் மேல் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தன.
இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக, ஆகஸ்ட் 27 முதல் மேலும் 25% வரியை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளது. ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதற்கு டிரம்ப் விதித்த அபராதமாக இது பார்க்கப்படுகிறது. இது பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. இருந்தாலும் ஒரு துறை மட்டும் இந்த சரிவிலும் வளர்ந்து வருகிறது.

ஆட்டோமொபைல் பங்குகள் ஒரு நம்பிக்கையான துறையாக உருவெடுத்துள்ளன. இத்துறை, பெருமளவில் அமெரிக்க ஏற்றுமதியைச் சார்ந்து இல்லை என்பதால் அமெரிக்காவின் உயர் வரிகளால் இந்த துறைக்கு பாதிப்பு இல்லை.
அதுமட்டுமில்லாமல் ரெப்போ வட்டியில் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பு, நல்ல மழைப்பொழிவு, வரவிருக்கும் பண்டிகைக் காலம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை நான்கு பிரிவுகளில் இருந்து இரண்டு பிரிவுகளாகக் குறைக்கும் யோசனை ஆகியவை இணைந்து ஆட்டோமொபைல் துறைக்கான சாதகமான கண்ணோட்டத்தை வலுப்படுத்தியுள்ளன.
கடந்த சில காலாண்டுகளாக மந்தமாக இருந்த ஆட்டோமொபைல் தேவை மீண்டும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த காரணிகள், ஆகஸ்ட் மாதத்தில் ஆட்டோமொபைல் பங்குகளை வலுவான செயல்திறன் கொண்டவையாக மாற்றியுள்ளன.
நிஃப்டி ஆட்டோ குறியீடு ஆகஸ்ட் மாதத்தில் 7% வளர்ச்சி கண்டு, நிஃப்டி 50 குறியீட்டை விட (இதே காலகட்டத்தில் 0.61% சரிந்தது) கணிசமாக உயர்ந்தது. இன்று, இக்குறியீடு 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 25,589 என்ற உச்சத்தை எட்டியது. ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி இந்தியா மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஆகிய பங்குகள் 52 வார புதிய உச்சத்தைத் தொட்டன.
அசோக் லேலண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, மற்றும் போஷ் போன்ற பிற பங்குகளும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய 1 வருட உச்சங்களைத் தொட்டன. இந்த சமீபத்திய ஏற்றம், கடந்த காலத்தில் குறைந்த விலையில் இருந்த சில பங்குகளும் கணிசமாக மீண்டு வர உதவியுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் ஏப்ரல் 7ஆம் தேதி நிலவிய குறைந்த விலையிலிருந்து 54.27% உயர்ந்துள்ளது. போஷ் பங்குகள் அதே காலகட்டத்தில் இருந்து 53% மீண்டுள்ளன. அதேசமயம், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 50.71%, எம்ஆர்எஃப் 39%, மஹிந்திரா & மஹிந்திரா 36.18%, அசோக் லேலண்ட் 36%, சம்வர்தனா மதர்சன் 30%, மற்றும் டாடா மோட்டார்ஸ் 25.65% என 2025-ஆம் ஆண்டின் குறைந்த விலையிலிருந்து மீண்டு வந்துள்ளன. மாருதி சுசுகி இந்தியா மற்றும் ஈச்சர் மோட்டார்ஸ் போன்ற பிற பங்குகளும் செப்டம்பர் 2024-ஆம் ஆண்டின் குறைந்த விலையிலிருந்து முறையே 37.52% மற்றும் 38% உயர்ந்து வலுப்பெற்றுள்ளன.
ஜெஃப்ரீஸ், அதன் சமீபத்திய அறிக்கையில், ஜிஎஸ்டி குறைப்பு ஆட்டோமொபைல் தேவைக்கு, குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய கார்களின் விற்பனைக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளது. கார் மற்றும் பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை 28%லிருந்து 18% ஆக குறைத்தால் வாகன விற்பனை பெருகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜெஃப்ரீஸ் கணிப்பின்படி, 2026-28ஆம் நிதியாண்டில் இருசக்கர மற்றும் பயணிகள் வாகனங்களின் விற்பனை 2-6% வரை உயரக்கூடும். இது டிவிஎஸ் மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, மற்றும் ஹூண்டாய் மோட்டார் போன்ற நிறுவனங்களின் விற்பனை, லாபத்தை அதிகரிக்க செய்யும்.
இவற்றில், டிவிஎஸ் மோட்டார் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை அதிக வருவாய் வளர்ச்சியைக் கொடுக்கும் என்று ஜெஃப்ரீஸ் எதிர்பார்க்கிறது. பங்கு மதிப்பீடுகளைப் பொறுத்தவரை, ஜெஃப்ரீஸ் ஹீரோ மோட்டோகார்ப்-பை 'underperform' நிலையிலிருந்து 'hold' நிலைக்கு உயர்த்தியுள்ளது. டிவிஎஸ் மோட்டார் 'வாங்கலாம்' பிரிவில் நீடிக்கிறது, அதன் இலக்கு விலை ரூ.3,500-லிருந்து ரூ.4,250 ஆக திருத்தப்பட்டுள்ளது.
மாருதி சுசுகியும் ’வாங்கலாம்' என்ற பிரிவில் உள்ளது, பஜாஜ் ஆட்டோ 'வைத்திருக்கலாம்' என்ற பிரிவில் தொடர்கிறது, ஈச்சர் மோட்டார்ஸ் ' வாங்கலாம்' என்ற பிரிவில் உள்ளது, அதே போல மஹிந்திரா & மஹிந்திரா 'வாங்கலாம்’ என்ற மதிப்பீட்டைத் தக்கவைத்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications