ஐஆர்சிடிசி பங்கினை வாங்க பரிந்துரை செய்த நிபுணர்கள்.. உங்ககிட்ட இருக்கா?

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த 5 அமர்வுகளில் 5% ஏற்றம் கண்டுள்ளது.

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் நிகரலாபம் 200% அதிகரித்து, 245.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டில் 82.5 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

வருவாய்

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதம் 250% அதிகரித்து 852.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்ப்பினை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது கடந்த ஆண்டில் 258 கோடி ரூபாயாக இருந்தது. இதே செலவினங்கள் 548 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 147 கோடி ரூபாயாக இருந்தது.

எபிடா விகிதம்

எபிடா விகிதம்

இந்த நிறுவனத்தின் எபிடா விகிதம் ஜூன் காலாண்டில் 320.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 111.5 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே எபிடா மார்ஜின் விகிதம் 38% ஆக உள்ளது.

ஐஆர்சிடிசி-யின் வருவாய் விகிதம் பெரும் வளர்ச்சியினை கண்டுள்ளது. குறிப்பாக அதன் கேட்டரிங் சேவையில் 352 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 56.7 கோடி ரூபாயாக இருந்தது.

டிக்கெட்

டிக்கெட்

இணைய மூலம் விற்பனை செய்யும் டிக்கெட் மூலம் 301.6 கோடி ரூபாயாக வருவாயினை கண்டுள்ளது.

இதே ரயில் நீர் மூலம் 83.6 கோடி ரூபாயாகவும், இதே சுற்றுலா துறை மூலம் 81.9 கோடி ரூபாயாகவும், ஸ்டேட் தீர்த்தா மூலம் 33.2 கோடி ரூபாயாகவும் வருவாயினை ஈட்டியுள்ளது.

இலக்கு விலை

இலக்கு விலை

இனி வரும் காலாண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நடப்பு ஆண்டில் இந்த பங்கின் விலை இதுவரையில் 20% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. எனினும் தரகு நிறுவனம் இந்த பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் விலை 635 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+