மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது இந்த வாரத்தில் 3% திருத்தம் கண்டுள்ளது. எனினும் பொதுவாக ரிலையன்ஸ் பங்குகள் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பே இருந்து வருகின்றது.
ஒரு மாதத்தில் இப்பங்கின் விலையானது 10% சரிவினைக் கண்டுள்ளது. இதே இதன் ஆல் டைம் உச்சத்தில் இருந்து 17% சரிவினைக் கண்டுள்ளது.
இந்திய பங்கு சந்தையில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தற்போது 2400 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.
வாங்கலாம்
எனினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும், இதன் இலக்கு விலையானது 3000 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என கணித்துள்ளனர். இது 3500 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில் இப்பங்கினை வாங்கலாம் என ஜெஃபரீஸ் கணித்துள்ளது.
கவனிக்க வேண்டியவை
ஜெஃபரீஸ் இலக்கு விலையானது 3080 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. எனினும் ஜியோவில் எதிர்பார்க்கப்பட்ட கட்டண உயர்வுகளை விடக் குறைவு, இ- காமர்ஸில் அதிக முதலீடு, குறைந்த சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் மார்ஜின் விகிதம், எஃப் சி பி , புதிய எனர்ஜி லெவலில் முதலீடுகள் போதுமானதாக இல்லை.
மேற்கண்ட பற்பல காரணிகளுக்கு மத்தியில் ரிலையன்ஸின் ஹைட்ரஜனில் செலவினை குறைக்க வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாதகமான காரணிகள்
எனினும் வலுவான நிதி நிலைமை, தொடர்ச்சியான ஆரோக்கியமான செலவு, ஜியோவில் டிஜிட்டல் வளர்ச்சி, ரிலையன்ஸின் வலுவான பேலன்ஸ் ஷீட், புதிய புதிய முதலீடுகள் என பலவும் ரிலையன்ஸ்-ன் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். இதற்கிடையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையினை வாங்லாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
வளர்ச்சி எதிர்பார்ப்பு
ரிலையன்ஸின் ஜியோ, இ-காமர்ஸ் வணிகம், எனர்ஜி வணிகம், புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் முதலீடு என பலவும் நிறுவனத்தினை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். குறிப்பாக ஜியோவின் கட்டணம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ பங்கு சந்தையில் நுழையலாம். ஜியோமார்ட்டின் வளர்ச்சியும் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் ஜெஃபரீஸ் ரிலையன்ஸ் இலக்கு விலையினை கீழாக 2350 ரூபாய் வரையில் செல்லலாம் என கணித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications