இன்று என்ன செய்யலாம்.. கவனிக்க வேண்டிய ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் உள்ளிட்ட 3 பங்குகள்.. ஏன்?

இந்திய பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சற்றே ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 274.12 புள்ளிகள் அதிகரித்து, 61,418 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 84.25 புள்ளிகள் அதிகரித்து, 18,244 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் இன்று சந்தையின் போக்கு எப்படியிருக்கும்? இன்று சந்தையில் கவனிக்க வேண்டிய சில முக்கிய பங்குகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

நிஃப்டியின் முக்கிய லெவல்

நிஃப்டியின் முக்கிய லெவல்

நிஃப்டியின் சமீபத்திய உச்சமான 18,450 என்ற லெவலை உடைத்து மேலே செல்லும்பட்சத்தில், இது அடுத்ததாக 18,600 என்ற லெவலை எட்டலாம் என ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இதற்கிடையில் கவனிக்க வேண்டிய பங்குகளாக ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ், வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 2729 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இது முடிவில் அடிப்படையில் 2700 என்ற லெவலுக்கு மேலாகவே முடிவடைந்துள்ளது. இது பொலிங்கர் பாண்ட்ஸ், இது அப்பர் பேண்ட் லெவலுக்கு மேலாகவும் காணப்படுகின்றது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது 2930 ரூபாய் என்ற லெவலையும் எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேசமயம் இப்பங்கின் விலையானது குறையும்பட்சத்தில் 2585 என்ற லெவல் வரை செல்லலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பாரத் டைமிக்ஸ்

பாரத் டைமிக்ஸ்

பாரத் டைமிக்கின் பங்கு விலையானது நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில், இப்பங்கின் விலையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் இப்பங்கின் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இன்று இப்பங்கின் கேண்டில் பேட்டர்னில் மாருபோஸோ பார்ம் ஆகியுள்ள நிலையில், இது மேற்கொண்டு ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் டைமிக்ஸ் இலக்கு விலை

பாரத் டைமிக்ஸ் இலக்கு விலை

இது தொடர்ந்து 1000 ரூபாய்க்கு மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் எதிர்மறையாக இப்பங்கின் விலையில் 900 ரூபாய் என்ற லெவல் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இப்பங்கின் விலையானது 966.30 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.

வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ்  இலக்கு விலை

வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ் இலக்கு விலை

வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ் பங்கினை 607.50 - 611.95 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலை 641 ரூபாயாகவும், இதன் ஸ்டாப் லாஸ் விலை 597.50 ரூபாயாகவும் பரிந்துரை செய்துள்ளனர்.

பாசிட்டிவான டெக்னிக்கல் காரணிகள்

பாசிட்டிவான டெக்னிக்கல் காரணிகள்

வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ் பங்கினிலும் கப் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், இது மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டெக்னிக்கல் குறியீடுகள் பலவும் ஏற்றம் காணலாம் எனும் விதமாக சுட்டிக் காட்டுகின்றன. இது மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+