இது தான் மாற்று.. இந்த 5 பங்குகளை வாங்கி போடலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பரான பரிந்துரை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் ஆனது சுமார் 30,000 லெவலில் காணப்படுகின்றது. நிபுணரின் கணிப்பின் படி 30,500 என்ற லெவலை மீடியம் டெர்மில் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், லார்ஜ் கேப் இன்டெக்ஸ் ஆனது மேற்கொண்டு ஏற்றம் கண்டு வருகின்றது.

வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?! வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?!

மிட் கேப் & ஸ்மால் கேப்

மிட் கேப் & ஸ்மால் கேப்

குறிப்பாக லார்ஜ் கேப் நிறுவனங்களின் ஏற்றம் என்பது சந்தை ஏற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது, ஐடி சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் ஏற்றத்தினை காண வழிவகுக்கலாம். இது முதலீட்டாளர்கள் மத்தியில் வாங்க ஆர்வத்தினை தூண்டலாம்.

என்னென்ன பங்குகள்?

என்னென்ன பங்குகள்?

ஆக சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நல்ல ஏற்றம் காண வழிவகுக்கலாம். குறிப்பாக நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வழிவகுக்கலாம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் நிறுவனம் கோபோர்ஜ், பிர்லாசாப்ட், டாடா எல்க்ஸி, பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா பங்குகள் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

நிஃப்டி ஐடி லெவல்

நிஃப்டி ஐடி லெவல்


நிஃப்டி ஐடி குறியீடானது சுமார் 30,000 என்ற லெவலில் காணப்பட்டது. இது முடிவு விலையின் அடிப்படையில் அடுத்ததாக 30,500 என்ற லெவலை உடைக்கும்பட்சத்தில், அடுத்ததாக 33,400 என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய சந்தை நிலவரம்?

இன்றைய சந்தை நிலவரம்?

இன்றைய சந்தை அமர்வின் நிஃப்டி பேங்க் நிஃப்டி மற்றும் பி எஸ் இ சென்செக்ஸ் இது வரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. நிஃப்டி 50 18,533 என்ற லெவலை எட்டியுள்ளது. சென்செக்ஸ் 62,447 என்ற புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. பேங்க் நிஃப்டி 43,339 என்ற லெவலை எட்டியுள்ளது.

 


Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Experts recommendation to buy these 5 stocks

Experts predict that Coforge, BirlaSoft, Tata Elxsi, Firstsource Solutions and Tech Mahindra may recommend buying the stock.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X