செம சான்ஸ்.. பலன் தரப்போகும் 5 பென்னி பங்குகள்.. நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பென்னி பங்குகள் பொதுவாக ரிஸ்கானவை என கூறப்படுகின்றன. மிக மிக குறைந்த விலையில் இந்த பங்குகள் இருப்பதால், குறைந்த முதலீட்டில் அதிக பங்குகளை வாங்க முடியும்.

எனினும் இப்படிப்பட்ட பங்குகள் எதற்காக குறைந்தது என்பது மிக முக்கியமான விஷயமாகும்.

பொதுவாக இந்த பங்குகள் அனைத்தும் ஏற்றம் காணலாம் என கருத முடியாது. எனினும் இந்த பங்குகளை வாங்கும் முன்பு ஒரு முறைக்கு பல முறை பல விஷயங்களையும் கவனித்து வாங்குவது நல்லது.

பென்னி பங்கு கொடுத்த அட்டகாசமான சான்ஸ்.. 3 வருடத்தில் 1163%.. ஆனா இன்னொரு சான்ஸூம் இருக்கு? பென்னி பங்கு கொடுத்த அட்டகாசமான சான்ஸ்.. 3 வருடத்தில் 1163%.. ஆனா இன்னொரு சான்ஸூம் இருக்கு?

எந்த கஷ்டமும் இல்லை

எந்த கஷ்டமும் இல்லை

முதலீடு செய்யும்போது ரிஸ்கும் இருக்கத்தான் செய்யும். நான் ரிஸ்கினை எடுக்க விரும்புகிறேன். ஆக எனக்கு இதில் எந்த கஷ்டமும் இல்லை என நினைப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த பென்னி பங்குகள் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

குறிப்பாக ஃபண்டமெண்டல் காரணிகள் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும். இது வலுவாக காணப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

கடன் Vs மார்ஜின்

கடன் Vs மார்ஜின்

குறிப்பாக நிறுவனத்தின் முந்தைய நிதி நிலை அறிக்கைகள், மார்ஜின் விகிதம் எப்படி இருக்கிறது. நிறுவனத்தின் கடன் விகிதம் எப்படி இருக்கிறது. கடன் இருந்தாலும் அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்றமானதா? இது எதிர்கொள்ள கூடியதா? உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுக்கலாம்.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

பொதுவாக இதுபோன்ற பென்னி பங்குகள் பலவும் ஏற்றம் காணவில்லை. இதனையெல்லாம் கவனித்து இதற்கெல்லாம் உங்களுக்கு சரி எனத் தோன்றும்போது தான் இந்த பங்கினை வாங்காலாமா? வேண்டாமா? என்பது குறித்து யோசிக்க வேண்டும். . இந்த பங்குகள் ஏற்றம் காணும்போது நீண்டகால நோக்கில் நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

என்னென்ன பங்குகள்?

என்னென்ன பங்குகள்?

சில சமயங்களில் இந்த பங்குகள் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருவாய் விகிதம், லாபம், டிவிடெண்ட் பேஅவுட், கடன் என பலவற்றையும் கவனிக்க வேண்டி இருக்கும்.

அப்படி கவனிக்க வேண்டிய பங்குகளில் டிரான்ஸ்பார்மெர்ஸ் அன்ட் ரெக்டிபையர்ஸ் இந்தியா (TRIL), ஜாக்ரன் பிரகஷன்( Jagran Prakashan), இர்கான் இண்டர்நேஷனல் (Ircon International), குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர், நேஷனல் அலுமினியம் (NALCO)

டிரான்ஸ்பார்மெர்ஸ் அன்ட் ரெக்டிபையர்ஸ் இந்தியா

டிரான்ஸ்பார்மெர்ஸ் அன்ட் ரெக்டிபையர்ஸ் இந்தியா

1994ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் டிரான்ஸ்பார்மர்ஸ் அன்ட் ரெக்டிபையர்ஸ் இந்தியா ஆகும். இந்தியா டிரான்ஸ்பர்மர் துறையில் ஒரு பரந்த அளவிலான மின்மாற்றிகளின் உற்பத்தியாளராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் முன்னணி நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனம் மின்மாற்றிகள், ரெக்டிஃபையர் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் ஷன்ட் ரியாக்டர்கள் உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு அகமதாபாத்தில் மூன்று பிளான்ட்கள் உள்ளன.

TRIL வருவாய்

TRIL வருவாய்

டிஆர்ஐஎல் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது நடப்பு ஆண்டில் கணிசமான உச்சத்தினை எட்டியுள்ளது. இதன் லாபமும் 139.9 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் கடன் விகிதமும் 0.91x என்ற விகிதத்தில் உள்ளது. இது ஒரு செயல்பாட்டு மூலதனம் வணிக வளர்ச்சிக்கு உதவினாலும், கடனை நிர்வகிக்க கூடிய ஒன்றாக உள்ளது.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வருவாய் விகிதத்தின் மத்தியில் கடந்த நிதியாண்டில் 11,583 கோடி ரூபாயாக இருந்தது. லாபமும் கந்த ஆண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது. டிவிடெண்டும் கடந்த ஆண்டு 14.2% ஆக இருந்தது. கடந்த மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆர்டர் புத்தகத்தின் மதிப்பு 11.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்களிடம் இருந்து இரண்டு பெரிய ஆர்டர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 18, 2022ல் 15.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜாக்ரன் பிரகஷன்

ஜாக்ரன் பிரகஷன்

ஜாக்ரன் பிரகஷன் இந்தியாவின் முன்னணி மீடியா மற்றும் கம்யூனிகேஷன் குழுமமாகும். ஜேபிஎல் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் பிரின்ட், அவுட்டோர் விளம்பரம், எஃப் எம், டிஜிட்டல் துறை உள்ளிட்டவற்றை கொண்ட, நாட்டின் முன்னணி மீடியா நிறுவனமாகும். 5 மொழிகளில் 9 செய்தித்தாள்கள், 100 பதிப்புகள் கொண்ட 15 மாநிலங்களில் பரவியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய தினசரி செய்தித்தாளாக இருக்கும்.

கடன் குறைவு

கடன் குறைவு

இது தவிர 39 ரேடியோ சேனல்களிலும் வணிக ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக விளம்பர வருவாய் விகிதம் குறைந்துவிட்டது. எனினும் கடந்த ஒரு ஆண்டாக மீளத் தொடங்கியுள்ளது.

இருப்பினும் பணவீக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட உயர் செய்தித்தாள் கொண்ட செலவுகள் நிறுவனத்தின் லாபத்தினை தொடர்ந்து பாதிக்கின்றன. இந்த நிறுவனத்திற்கு 0.13x பங்கு விகிதத்தில் கடன் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் கடன் விகிதம் என்பது ஜீரோ அல்லது மிக குறைந்த அளவாக உள்ளது. இதுவே இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.

வருவாய் எப்படி - ஜாக்ரன்

வருவாய் எப்படி - ஜாக்ரன்

ஜாக்ரன் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது கடந்த நிதியாண்டில் 16,160 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் நிகர லாபம் முந்தைய ஆண்டினை காட்டிலும் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 2169 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் கடன் விகிதம் 2770 கோடி ரூபாயாகவும் உள்ளது.

இர்கான் இண்டர்நேஷனல்

இர்கான் இண்டர்நேஷனல்

இர்கான் இண்டர்நேஷனல் பொதுத்துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இது ரயில்வே கட்டமைப்பு பணிகளை செய்து வருகின்றது. இது ரோடுகள், கட்டிடங்கள், துணை மின் மின்சார நிலையங்கள், விமான நிலையங்கள் கட்டுமானம், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய கட்டிட பணிகள் என பலவற்றையும் செய்து வருகின்றது.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

இது இந்தியாவில் மட்டும் அல்ல, வெளி நாடுகளிலும் தனது சேவையை செய்து வருகின்றது. இதன் வருவாய் 38% அதிகரித்துள்ளது. இதன் நிகர விற்பனையானது 50% அதிகரித்துள்ளது. இதன் லாபம் 35% அதிகரித்துள்ளது. இதன் வருவாய் விகிதம் 2022ம் நிதியாண்டில் 73,797 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் நிகரலாபம் 5923 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் கடன் விகிதம் 13,990 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. எனினும் முந்தைய ஆண்டுகளை விட அதிகம்.

குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர்

குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர்

குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர் நிறுவனம் பொதுத்துறையை சேர்ந்த நிறுவனமாகும், இந்த நிறுவனம் குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைசர்ஸ், குஜராத் அல்கலீஸ் மற்றும் கெமிக்கல்ஸ், குஜராத் உர்ஜா விகாஸ் போன்ற முன்னணி குஜராத் பொதுத்துறை நிறுவனங்களின் புரோமோட்டராகவும் உள்ளது. இது குறைந்தபட்ச கடனைக் கொண்டுள்ளது. மார்ச் 2022 நிலவரப்படி பங்கு விகிதத்திற்கான கடன் மதிப்பு 0.17x ஆக இருந்தது.

டிவிடெண்ட்

டிவிடெண்ட்

டிவிடெண்டினை பொறுத்தவரையில் குஜராத் இண்டஸ்ட்ரீஸ் 1997 முதல் அறிவித்து வருகின்றது. இதன் வருவாய் விகிதம் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் வருவாய் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் லாபம் 1713 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளை காட்டிலும் சரிவினைக் கண்டுள்ளது.

நேஷனல் அலுமினியம்

நேஷனல் அலுமினியம்

நேஷனல் அலுமினியம் ( நால்கோ) ஒரு நவரத்னா நிறுவனமாகும். இது பல துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு நிருவனமாகும். இது இந்தியாவில் மிகப்பெரிய வருவாயினை கண்டு வரும் நிறுவனமாகும். குறிப்பாக அலுமினியம் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இதன் வருவாய் விகிதம் 2022 நிதியாண்டில் 1,41,808 கோடி ரூபாயாகும். இதன் லாபம் 29,514 கோடி ரூபாயாகும். அதேசமயம் இதன் கடன் விகிதம் குறைவாக காணப்படுகின்றது.

சப்ளை சங்கிலியில் பிரச்சனை

சப்ளை சங்கிலியில் பிரச்சனை

தற்போது சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலக்கரிக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் இருந்து வருகிறது. அலிமினியம் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. அரசியல் பிரச்சனைகளால் நிலவி வரும் பதற்றமான சூழல் இனி வரவிருக்கும் காலங்களில் மாறலாம். இது நிறுவனத்திற்கு சாதகமான ஒன்றாக மாறலாம்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Experts suggest that 5 penny stocks may see a boom in the long term

Transformers and Rectifiers India (TRIL), Jagran Prakashan, Ircon International, Gujarat Industries Power and National Aluminum (NALCO) are some of the penny stocks to watch out for
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X