டெல்லி: நீங்கள் மேக் அப் பிரியராக இருக்கும்பட்சத்தில் மேக் அப் பற்றி நினைத்தாலே நினைவுக்கு வருவது நய்காவாகத் தான் இருக்கும். ஏனெனில் இளம் பெண்கள் விரும்பும் பல பேஷன் பொருட்களை நய்கா நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது.
நய்கா பேஷன் மற்றும் காஸ்மெடிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வரும் ஒரு பேஷன் நிறுவனமாகும்.
பல வெளி நாட்டு பிராண்டுகள்,சொந்த பிராண்டுகள் என பலவற்றையும் பட்ஜெட் விலையில் கொடுத்து வருகின்றது. இதனாலேயே இன்றும் நய்கா வெற்றிகரமான ஒரு பிராண்டாக இந்தியாவில் வலம் வந்து கொண்டுள்ளது.
மேக் அப் ராணி
இந்தியாவின் சிறந்த பெண் தொழில் முனைவோர்களில் ஒருவராக திகழ்பவர் ஃபல்குனி நாயர். இவர் தான் நய்கா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார். இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான பல்குனி நாயர், மேக் அப்களின் ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.
பல்வேறு பிராண்டுகள்
இந்த மேக் அப் ராணி வெளிநாட்டு பிராண்டுகள் மட்டும் அல்ல, சொந்தமாக ஒரு பிராண்டையும் உருவாக்கி அதனையும் நய்கா நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றார். நய்காவில் 2600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஒரு வங்கியாளராக தனது பயணத்தை தொடங்கிய ஃபல்குனி நாயர், 2012ல் தான் தனது தொழில் பயணத்தினையே ஆரம்பித்தார்.
இவ்வளவு சரிவா?
இப்படிப்பட்ட ஒரு மேக் அப் குயினின் சொத்து மதிப்பு இந்த மாத தொடக்கத்தில் 4 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இதன் இந்திய மதிப்பு சுமார் 32,915 கோடி ரூபாயாகும். அதில் சுமார் 1 பில்லியன் டாலர் குறைந்து விட்டது எனலாம். இந்திய ரூபாயில் கிட்டதட்ட 8300 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது எனலாம். இம்மாதம் 12ம் தேதி நிலவரப்படி ஃபோர்ப்ஸ் பில்லியனர் அறிக்கையின் படி, அவரின் சொத்து மதிப்பு 4.08 பில்லியன் டாலராகும்.
கிரணை விஞ்சிய பல்குனி நாயர்
59 வயதான பல்குனி நாயர் இந்தியாவின் பணக்கார பெண்மனியான, பயோடெக் ராணியான கிரண் மசூம்தார் ஷா (24,800 கோடி ரூபாயினை )வை தாண்டி இந்தியாவின் சிறந்த பணக்கார பெண்மனியாக இம்மாத தொடக்கத்தில் உயர்ந்திருந்தார். இந்த ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு 345% அதிகரித்துள்ளது.
ஏன் இந்த சரிவு?
நய்கா நிறுவனம் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாகவே பங்கு சந்தையில் சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த காலகட்டத்தில் அதன் பங்கு விலை 20% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 975.5 ரூபாயினை தொட்டது. இதன் மூலம் பல்குனியின் சொத்து மதிப்பானது 1 பில்லியன் டாலர்களுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
பங்கு வரலாறு நிலவரம்
ஆக வெள்ளிக்கிழமை நிலவரப்படி பல்குனியின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் பங்கு விலையானது பட்டியலிட்டதில் இருந்து இரு மடங்கு லாபத்தினை கொடுத்த நிலையில், தற்போது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. அதன் 52 வார உச்ச விலை 2574 ரூபாயில் இருந்து, 62% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வெளியீட்டு விலை 1125 ரூபாயாகும். தற்போது வெளியீட்டு விலையில் இருந்து 13% சரிவில் காணப்படுகின்றது.
இதுவும் ஒரு காரணம்
பங்கு வெளியீட்டு முந்தைய முதலீட்டாளர்களின் லாக் இன் காலம் முடிவடையவுள்ள நிலையில், பங்கின் விலை சரியலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதன் காரணமாக இப்பங்கின் விலை சரிந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 5 பங்குகள் போனஸ் பங்குகளாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. இது மேற்கொண்டு இந்த பங்குகள் சரிய காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications