இந்தியாவின் பிரபல முதலீட்டாளரான முகுல் மகாவீர் அக்ரவால் ஒரு ஸ்மால் கேப் நிறுவனத்தில் 6.5% பங்குகளை வாங்கி இருப்பது தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. முகுல் மகாவீர் அக்ரவால் ஜுனுடன் முடிவடைந்த காலாண்டில் தாக்கல் செய்த ஆவணத்தில் அவர் புதிதாக ஏஎஸ்எம் டெக் என்ற ஸ்மால் கேப் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
ஏஎஸ்எம் டெக்(ASM TECH) நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,324 கோடி ரூபாய். இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 10, புக் வேல்யூ 98, ஈக்விட்டிக்கு எதிரான இதன் கடன் மதிப்பு 0.58 ஆகும். இந்த நிறுவனம் பொறியியல் பணிகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இது மையங்களை அமைத்து பல்வேறு நிறுவனங்களுக்கு பொறியியல் துறை சார்ந்த பணிகளை செய்து கொடுக்கிறது.

இந்த நிறுவனம் உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனம், ரோபோடிக்ஸ், தானியங்கி வாகனங்கள் என பல்வேறு துறைகளுக்கு தேவையான பொறியியல் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தான் முகுல் தற்போது பங்குகளை வாங்கி இருக்கிறார். ஜூலை 5ஆம் தேதி அன்று மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1206 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
இந்த நிறுவன பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 135 சதவீதம் லாபத்தை தந்துள்ளது கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் 2300 சதவீத லாபத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த பங்கின் 52 வார காலம் உச்சபட்ச மதிப்பு 1370 ரூபாய், 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 416 ரூபாய். இந்த நிறுவனத்தின் வருமானம் 2024 ஆம் ஆண்டு 206 கோடி ரூபாயாக இருக்கிறது, இதுவே 2023 ஆம் ஆண்டில் 227 கோடி ரூபாயாக இருந்தது. அதுமட்டுமின்றி 2024 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
இருந்தாலும் நிறுவனத்தின் மதிப்பு என்பது 2024 ஆம் ஆண்டு 136 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் 61% புரமோட்டோர்கள் வசமும், சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 37.81 % பங்குகளும் இருக்கின்றன.
முகுல் மகாவீர் அக்ரவாலை பொருத்தவரை பெரும்பாலும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் மற்றும் பென்னி ஸ்டாக்குகளை தேர்ந்து எடுத்து முதலீடு செய்யக்கூடிய ஒரு நபர். இவர் தற்போது 51 நிறுவனங்களில் சுமார் 2,658 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications