அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமெரிக்கா முதலில் என்ற கொள்கை, சீன பங்குச் சந்தைகளின் எழுச்சி போன்றவை, இந்தியாவை விற்று, சீனாவை வாங்கு என்ற வர்த்தகத்தை தூண்டியுள்ளது. அதாவது இந்திய பங்குகளை விற்பனை செய்து, சீன பங்குகளை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுத்தியுள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. 2024 அக்டோபர் முதல் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி டாலருக்கு மேல் சரிவடைந்துள்ளது. அதேசமயம், இதே காலத்தில் சீன பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
டீப்செக்கின் அபரிதமான உயர்வு, அலிபாபா மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்கள் அறிவித்த திடமான வருவாய் வளர்ச்சி மற்றும் நிறுவன பங்குகளின் மதிப்பு குறைவாக இருப்பது போன்றவற்றால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் பங்குகளை விற்பனை செய்து விட்டு, சீன பங்குகளை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் சீனாவின் ஹேங் சென் 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது அதேவேளையில், நிப்டி 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

சீனாவின் சந்தை எழுச்சிக்கு அந்நாட்டு அரசின் பொருளாதார ஊக்குவிப்பு, ஒழுங்குமுறை தளர்வு மற்றும் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள் ஆகியவற்றின் கலவையே காரணமாகும். அடுத்ததாக, சிஎஸ்ஐ300 இன்டெக்ஸ் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சரிவை சந்தித்தது. அதன் பிறகு தான் சீன சந்தையின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 9 ஆண்டுகளாக வளர்ச்சி கண்டது. இதனால் விலை அதிகமாக உள்ள இந்திய பங்குகளுடன் ஒப்பிடும்போது, சீன பங்குகளின் மதிப்பு மிகவும் குறைவாக உள்ளதால், அன்னிய முதலீட்டாளர்கள் சீன பங்குச் சந்தை பக்கம் திரும்பி விட்டனர்.
BofA அண்மையில் நடத்திய சர்வதேச பண்ட் மேலாளர் சர்வேயில் பல ருசிகரமான தகவல்கள் கிடைத்தது. அந்த அறிக்கையின்படி, 2025ம் ஆண்டில் ஈரோஸ்டாக்ஸ், நாஸ்டாக் மற்றும் ஹேங் செங் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட பங்கு குறியீடுகளாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது இந்திய பங்குச் சந்தைகள் மீதான அன்னிய முதலீட்டாளர்களின் உற்சாகம் குறைந்து வருவதை குறிக்கிறது. இருப்பினும் விரைவில் இந்திய பங்குச் சந்தைக்கு அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்புவார்கள் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
டெசெர்வின் இணை நிறுவனர் வைபவ் போர்வால் கூறுகையில், இந்திய பங்குகளின் அதிக மதிப்பீடு அதை குறைந்த கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. தற்போது சந்தை சரிவு இருந்தபோதிலும், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி கதை அப்படியே உள்ளது. வலுவான உள்நாட்டு தேவை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை நிறுவன வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் வளர்ச்சி மீண்டும் வருவதால், அடுத்த 3 முதல் 6 மாதங்களில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி முதலீடு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications