இந்திய ரூபாய் 2வது நாளாக அமெரிக்க டாலருக்கு எதிராக வலுப்பெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 90.62 ஆக இருந்த நிலையில், புதன்கிழமை 90.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிராக ரூபாய் இழந்த இடத்தை மீண்டும் பிடித்து வருகிறது. இது முதலீட்டு சந்தையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIகள்) செவ்வாய்க்கிழமை பெரும் அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர், இதனால் வாயிலாக அன்னிய செலாவணியில் டாலர் இருப்பு அதிகரித்து ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் FII முதலீட்டாளர்கல் சுமார் ரூ.5,236.28 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது அக்டோபர் 28, 2025க்குப் பிறகு கண்ட மிகப்பெரிய வெளிநாட்டு நிதி முதலீடாகும். FIIகளின் இந்த முதலீடுகள் தான் ரூபாய் வலுப்பெறுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதோடு நேற்று இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்தது. இதன் வாயிலாக நேற்று ஒரு நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு மூலம் பட்ஜெட் நாளில் பதிவான சரிவு ஈடுக்கட்டப்பட்டது.
மேலும் இன்றைய வர்த்தகம் சிறு தடுமாற்றத்துடன் துவங்கியுள்ளது. காலை முதல் வர்த்தகம் மந்த நிலையில் இருப்பது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் குறியீடு 40 புள்ளிகள் சரிவில் 83,696 புள்ளிகளிலும், நிஃப்டி வெறும் 18 புள்ளிகள் உயர்வுடன் 25,753 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மேலும் நேற்று இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த விமர்சனம் எழுந்தது. இதில் மத்திய அரசு விவசாயம், பால் துறை போன்ற முக்கிய துறைகளை அமெரிக்காவுக்கு திறந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு மாலை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த நிலையில், இக்கூட்டத்தில் விவசாயம், பால் துறைகளை அமெரிக்காவுக்கு அணுக அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்து, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த துறைகள் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்போது முதலீட்டு சந்தையின் கவனம் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை அறிவிப்பில் உள்ளது. இன்று துவங்கும் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கி வெள்ளிக்கிழமை முடிவுகளை அறிவிக்கும் போது. பிப்ரவரி 6ஆம் தேதி ரெப்போ விகிதம் 5.25 சதவீதத்தில் மாற்றமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்தால் ரூபாய் மீதான நம்பிக்கை தொடரும்.
ரூபாய் வலுப்பெறுவதால் இறக்குமதி பொருட்கள் விலை குறையலாம். வெளிநாட்டு பயணம், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு செலவு குறையும். FIIகளின் முதலீடு பங்குச் சந்தைக்கு நல்ல சிக்னல். ஆனால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வரை சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கலாம். முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications