முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும் பங்குகளை கண்டுபிடித்து முதலீடு செய்கிறார்கள். இந்தியா தனது பொருளாதார மாற்றத்துடன் முன்னேறி செல்லும்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற தொழில்கள் கொள்கை ஆதரவு மற்றும் தேவையால் விரைவான வளர்ச்சியை காண்கின்றன. இந்த துறைகளை சேர்ந்த நல்ல பங்குகளில் முதலீடு செய்தால் அது எதிர்காலத்தில் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுக்கும். அந்த வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுக்க வாய்ப்புள்ள 5 நிறுவன பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். அவற்றை பார்ப்போம்.
1. நாராயண ஹ்ருதயாலயா
சங்கிலித்தொடர் மருத்துவமனை நடத்தி வரும் நிறுவனம் நாராயண ஹ்ருதயாலயா. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் மட்டும் 45க்கும் மேற்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒரே ஒரு மருத்துவமனை இயக்கி வருகிறது. இதயம் மற்றும் சிறுநீரக சிறப்பு பிரிவுகளில் குறைந்த செலவில் மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்துவது, அதன் போட்டி நிறுவனங்களிடமிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க செயல்திறனை வழங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,577.15ஆக இருந்தது.

2019-20 முதல் 2023-24ம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்பனை ஆண்டுக்கு சராசரியாக 11.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இ்நிறுவனத்தின் சராசரி ஈக்விட்டி மீதான வருவாய் (RoE) மற்றும் மூலதனத்தின் மீதான வருமானம் (RoCE) முறையே 20.1 சதவீதம் மற்றும் 20.7 சதவீதமாக உள்ளது.
2. கேபிஐ கிரீன் எனர்ஜி
குஜராத்தை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் கேபிஐ கிரீன் எனர்ஜி. இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பல தசாப்த கால அனுபவத்தை கொண்ட நிறுவனமாகும். கடந்த டிசம்பர் நிலவரப்படி, இந்நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 533 மெகா வாட்டாக உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இதனை 1,000 மெகா வாட்டாக உயர்த்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை ரூ.391.80ஆக இருந்தது.
கடந்த 2000 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் நிகர லாபம் முறையே ஆண்டுக்கு சராசரியாக 96.9 சதவீதம் மற்றும் 78.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இ்நிறுவனத்தின் சராசரி ஈக்விட்டி மீதான வருவாய் (RoE) மற்றும் மூலதனத்தின் மீதான வருமானம் (RoCE) முறையே 27.1 சதவீதம் மற்றும் 20.2 சதவீதமாக உள்ளது. கொள்கை மாற்றங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றுடன் லாபத்தை பராமரிக்கும் அதே வேளையில், புதிய புவியியல் மற்றும் சர்வதேச சந்தைகளில் வளர்ச்சி காண கேபிஐ கிரீன் எனர்ஜி நல்ல நிலையில் உள்ளது.
3. ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் ரயில்வேக்கு அதிவேக பிராட்பேண்ட் மற்றும் நெட்வொர்க்கிங் சேவைகளை வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் டேட்டா மைய தீர்வுகளையும் வழங்குகிறது. 60,000 கி.மீ. நீளமுள்ள இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதிப்பதற்கும், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கும் பிரத்யேக உரிமை இந்நிறுவனத்திடம் உள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை ரூ.295.75ஆக இருந்தது.
கடந்த 2000 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் நிகர லாபம் முறையே ஆண்டுக்கு சராசரியாக 20.2 சதவீதம் மற்றும் 17.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இ்நிறுவனத்தின் சராசரி ஈக்விட்டி மீதான வருவாய் (RoE) மற்றும் மூலதனத்தின் மீதான வருமானம் (RoCE) முறையே 16.1 சதவீதம் மற்றும் 11.8 சதவீதமாக உள்ளது. நாட்டின் போக்குவரத்து மற்றும் பொதுத்துறைகளில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கலுடன், 5ஜி பயன்பாடு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ரயில்டெல் நிறுவனம் நல்ல நிலையில் உள்ளது.
4. சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ்
நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்பு சேவைகள் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ். இந்நிறுவனம் தனது மொத்த வருவாயில் பெரும் பங்கினை உள்நாட்டு சந்தையில் இருந்து பெறுகிறது. அதேசமயம் இந்நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக பிரிவும் வேகமாக விரிவடைந்து வருகிறது. ஒப்பந்த உற்பத்தியாளர்களாக மட்டுமே செயல்படும் மற்ற இஎம்எஸ் நிறுவனங்களை போலல்லாமல், சிர்மா நிறுவனம் தயாரிப்பு வடிவமைப்பிலும் விரிவடைந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை ரூ.439.95ஆக இருந்தது.
கடந்த 2000 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் நிகர லாபம் முறையே ஆண்டுக்கு சராசரியாக 67 சதவீதம் மற்றும் 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இ்நிறுவனத்தின் சராசரி ஈக்விட்டி மீதான வருவாய் (RoE) மற்றும் மூலதனத்தின் மீதான வருமானம் (RoCE) முறையே 18.7 சதவீதம் மற்றும் 18.6 சதவீதமாக உள்ளது. இது இன்னும் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு இருப்பதை குறிக்கின்றன. செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் அதேவேளையில் வலுவான லாபத்தை பராமரிப்பதிலும் சிர்மா நிறுவனத்தின் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது.
5. ஆரக்கிள் பைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட்
ஆரக்களி் குளோபல் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆரக்கிள் பைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட். இந்நிறுவனம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு சாப்ட்வேர் தயாரிப்புகளை வழங்குகிறது. இது தவிர, வங்கி மற்றும் நிதி சேவைகள், சுகாதாரம், உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பல்வேறு தொழில்களில் வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் சேவை வழங்குகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை ரூ.7,820.45ஆக இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் நிகர லாபம் முறையே ஆண்டுக்கு சராசரியாக 5.2 சதவீதம் மற்றும் 9.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இ்நிறுவனத்தின் சராசரி ஈக்விட்டி மீதான வருவாய் (RoE) மற்றும் மூலதனத்தின் மீதான வருமானம் (RoCE) முறையே 27 சதவீதம் மற்றும் 37 சதவீதமாக உள்ளது. இந்நிறுவனத்தின் எதிர்காலத்தை பொறுத்தவரை ஏஐ ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கு மையமாக உள்ளது, கிளவுட் அடிப்படையிலான நிதி தீர்வுகள் மற்றும் மூலோபாய கூட்டணிகளில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
Story Written : Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications