நல்ல காசு பார்க்கலாம்.. இண்டஸ் டவர்ஸ் உட்பட 10 பங்குகளில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் என்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு வெளியே பிற நாடுகளில் முதலீடு செய்யும் பெரிய நிறுவனங்களாகும். குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பர். அன்னிய முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் குறித்து நல்ல ஆய்வு செய்து முடிவு செய்வர்.

நாட்டின் பிரபலமான பல நிறுவனங்களில் அவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஸ்டாக்எட்ஜி தரவுகளின்படி, 2024 டிசம்பர் காலாண்டில் நிப்டி 200 குறியீட்டில் உள்ள இண்டஸ் டவர்ஸ் உள்ளிட்ட 10 நிறுவன பங்குகளில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளனர்.

நல்ல காசு பார்க்கலாம்.. இண்டஸ் டவர்ஸ் உட்பட 10 பங்குகளில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..!

இண்டஸ் டவர்ஸ்: 2023 டிசம்பர் காலாண்டில், மொபைல் டவர் நிறுவும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு மூலதனம் சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 24.19 சதவீதத்தில் இருந்து 26.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

டொரண்ட் பார்மா: மருந்து துறையை சேர்ந்த டொரண்ட் பார்மா நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த டிசம்பர் காலத்தில் தங்களது பங்கு மூலதனத்தை 1.7 சதவீதம் உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 14.46 சதவீதத்தில் இருந்து 16.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எச்டிஎஃப்சி வங்கி: நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்கு மூலதனத்தை 48.02 சதவீதத்தில் இருந்து 49.21 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். அதாவது கடந்த டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்கு மூலதனத்தை 1.2 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

வருண் பீவரேஜஸ்: பானங்கள் துறையை சேர்ந்த வருண் பீவரேஜஸ் நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த டிசம்பர் காலாண்டில் தங்களது பங்கு மூலதனத்தை 1 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தியுள்ளனர். 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 24.19 சதவீதத்தில் இருந்து 25.27 சதவீதமாக அதிகரித்துள்ளன.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல்: இந்நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்கு மூலதனத்தை 13.47 சதவீதத்தில் இருந்து 14.31 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். ஆக கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் தங்களது பங்கு மூலதனத்தை 0.80 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.

டிவிஸ் லேபாரட்டீஸ்: மருந்து வணிகத்தில் ஈடுபட்டு வரும் டிவிஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு மூலதனத்தை 0.7 சதவீதம் உயர்த்தியுள்ளனர். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 17.25 சதவீதத்தில் இருந்து 17.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எச்சிஎல் டெக்னாலஜிஸ்: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த டிசம்பர் காலாண்டில் தங்களது பங்கு மூலதனத்தை 0.7 சதவீதம் அதிகரித்துள்ளனர். இதனையடுத்து இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 18.67 சதவீதத்தில் இருந்து 19.38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கம்மின்ஸ் இந்தியா: டீசல் என்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கம்மின்ஸ் இந்தியா நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த டிசம்பர் காலாண்டில் தங்களது பங்கு மூலதனத்தை 17.50 சதவீதத்தில் இருந்து 18.09 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். கடந்த காலாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்கு மூலதனத்தை 0.6 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

வேதாந்தா: சுரங்கம், உலோகம் உற்பத்தி என பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் வேதாந்தா நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த டிசம்பர் காலாண்டில் தங்களது பங்கு மூலதனத்தை 0.6 சதவீதம் உயர்த்தியுள்ளனர். அந்த காலாண்டில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 11.45 சதவீதத்தில் இருந்து 12.02 சதவீதமாக அதிகரித்துள்ளது.

விப்ரோ: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவில் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த டிசம்பர் காலாண்டில் தங்களது பங்கு மூலதனத்தை 0.5 சதவீதம் உயர்த்தினர். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 21.22 சதவீதத்திலிருந்து 21.74 சதவீதமாக உயர்ந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+