90 நாளில் ரூ.1 லட்சம் கோடியை கொட்டி வாங்கப்பட்ட 10 பங்குகள்..!

இந்திய பங்குசந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 19 சதவீதமாகக் குறைந்தாலும், செப்டம்பர் காலாண்டில் மட்டும் இந்த 10 பங்குகளை வாங்க சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து வாங்கியுள்ளனர்.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2022 ஆம் ஆண்டில் பெரும் தடுமாற்றங்களைக் கண்ட பின்பு செப்டம்பர் மாத முடிவில் இருந்தது தொடர் வளர்ச்சி பாதையில் உள்ளது. இந்தத் தொடர் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகள் தான்.

இந்த நிலையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இக்காலாண்டில் பெரும் தடுமாற்றத்திற்கு மத்தியிலும் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் வாங்கிய டாப் 10 பங்குகள் இதுதான்.

இந்திய பங்குச்சந்தையில்

இந்திய பங்குச்சந்தையில்

இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் இவர்களின் முக்கியமான தேர்வுகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

செப்டம்பர் காலாண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கிய 764 நிறுவனப் பங்குகளில் டாடா ஸ்டீல் முதல் இடத்தைப் பிடித்ததுள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் டாடா ஸ்டீல் பங்குகளைச் சுமார் 24,898 கோடி ரூபாய்க்கு 244.42 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர். இக்காலாண்டில் டாடா ஸ்டீல் பங்குகள் 14 சதவீதம் வரையில் உயர்ந்தது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகள்

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நவரத்னா டிபென்ஸ் நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகளைச் சுமார் வ 22,017 கோடி ரூபாய்க்கு தொகைக்குச் சுமார் 87.89 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர். இதன் மூலம் செப்டம்பர் காலாண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்த இரண்டாவது பெரிய நிறுவனமாகும்

டாப் 10 பங்குகள்

டாப் 10 பங்குகள்

இதைத் தொடர்ந்து பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் 15,680 கோடி ரூபாயும், மேக்ஸ் ஹெல்த்கேர் 9,656 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 8,807 கோடி ரூபாயும், சோமேட்டோ நிறுவனத்தில் 8,057 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ நிறுவனத்தில் 7,615 கோடி ரூபாயும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் 4,495 கோடி ரூபாயும், கெயில் 4,018 கோடி ரூபாயும், ஐடிசி நிறுவனத்தில் 3,255 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்துள்ள டாப் 10 நிறுவனங்களில், உள்நாட்டு முதலீட்டாளர்களும், ப்ரோகரேஜ் நிறுவனங்களும் அதிகம் முதலீடு செய்தது ஐசிடி, ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐசிஐசிஐ வங்கி தான்.

ஐசிடி பங்குகள்

ஐசிடி பங்குகள்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐசிடி பங்குகள் சுமார் 8 முறை டார்கெட் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐசிஐசிஐ ஆகியவை தலா 7 முறை டார்கெட் விலை உயர்வை எதிர்கொண்டு உள்ளது.

வங்கி பங்குகள்

வங்கி பங்குகள்

கடன் வர்த்தகத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி மற்றும் வலுவான, தூய்மையான இருப்புநிலைகள் ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் வங்கி பங்குகள் முக்கியத் தேர்வாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

இதன் எதிரொலியாக ஐசிஐசிஐ வங்கி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் மூன்றாவது பெரிய முதலீடாகவும் (ரூ. 3.26 லட்சம் கோடி) மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் இரண்டாவது பெரிய முதலீட்டு (ரூ. 2.23 லட்சம் கோடி) தேர்வாக உள்ளது.

முதலீட்டாளர்களுக்கான பரிந்துரை

முதலீட்டாளர்களுக்கான பரிந்துரை

சர்வதேச பொருளாதாரம் மந்தமடைந்து வரும் நிலையில் சந்தை வல்லுனர்கள் முதலீட்டாளர்கள் உள்நாட்டு நுகர்வு துறையைச் சார்ந்து இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு பரிந்துரை செய்கிறார்கள். ஏன் என்பதன் விளக்கத்தைக் கீழ் உள்ள செய்தியில் தெரிந்துகொள்ளவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+