இந்திய பங்குச் சந்தைகள் கடந்த செப்டம்பர் இறுதி முதல் தொடர்ந்து 5 மாதங்களாக சரிவு கண்டது. பங்குச் சந்தைகளின் இந்த சரிவின் பின்னணியில் டிரம்பின் வரி விதிப்பு உள்பட பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் அன்னிய முதலீட்டாளர்கள்தான். இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணம். நடப்பு மார்ச் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து சிறிது மீண்டு வந்துள்ளது. இருப்பினும், அன்னிய முதலீட்டாளர்கள் இந்த மாத தொடக்கத்திலும் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
என்எஸ்டிஎல் அளித்துள்ள தரவுகளின்படி, 2025 மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை, இந்திய பங்குச் சந்தைகளில் 19 துறைகளை சேர்ந்த மொத்தம் ரூ.32,411 கோடி மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக லார்ஜ் கேப் துறையை சேர்ந்த பங்குகளை அதிகளவில் விற்பனை செய்துள்ளனர். இது உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அன்னிய முதலீட்டாளர்கள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த மாதம் 15ம் தேதி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ஐடி துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் விற்பனை செய்துள்ளனர். மொத்தம் ரூ.6,934 கோடிக்கு ஐடி பங்குகளை விற்று தள்ளியுள்ளனர்.

2024ம் ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் ஐடி துறை பங்குகளில் மொத்தம் ரூ.14,000 கோடி முதலீடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின் முதல் 15 தினங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் ஐடி துறைக்கு அடுத்தப்படியாக எஃப்எம்ஜிசி துறையை சேர்ந்த பங்குகளை மொத்தம் ரூ.5,106 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். அடுத்ததாக மொத்தம் ரூ.3,640 கோடி மதிப்பிலான வாகன துறையை சேர்ந்த பங்குகளை விற்பனை செய்தனர். நிதி துறையை சேர்ந்த பங்குகளை ரூ.3,311 கோடிக்கு விற்பனை செய்தனர். சுகாதார துறையை சேர்ந்த பங்குகளை ரூ.2,049 கோடிக்கு விற்றனர். நுகர்வோர் சேவைகள் துறையை சேர்ந்த பங்குகளை ரூ.2,857 கோடிக்கு விற்பனை செய்தனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் மின்சா துறையை சேர்ந்த பங்குகளை ரூ.1,867 கோடிக்கு விற்பனை செய்தனர். நுகர்வோர் சாதன துறைகளை சேர்ந்த பங்குகளை ரூ.1,566 கோடிக்கு விற்பனை செய்தனர். பல மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகளை புறக்கணித்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகள விரும்ப தொடங்கி விட்டனர். கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக இருந்தனர். அதாவது பங்குளை விற்பனை செய்ததை காட்டிலும் பங்குகளை வாங்கியது அதிகமாகும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications