முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி பணத்தை இழந்தனர். இதற்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து பெருமளவிலான பணத்தை திரும்ப பெற்றதே காரணம் ஆகும்.
இந்த சூழலில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். ஜூன் 23ஆம் தேதியிலிருந்து ஜூன் 27ஆம் தேதி வரையிலான 5 வர்த்தக நாட்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 13,107.54 கோடி ரூபாயை இந்திய சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன. என்எஸ்டிஎல் வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது. இது பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜூன் 27 ஆம் தேதி அன்று பங்குச்சந்தைகள் முடியும்போது நிஃப்டி 50 25,632.25 புள்ளிகளில் முடிவடைந்து இருந்தது. நிஃப்டி 50 ஒரு வாரத்தில் 692 புள்ளிகள் உயர்ந்துள்ளது, சென்செக்ஸை பொருத்தவரை ஒரு வார காலத்தில் 2,324 புள்ளிகள் உயர்ந்து வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது 84 ,302 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய முன்வந்து வருகின்றன என்றால் இந்திய பங்குச் சந்தைகள் மீது அவற்றுக்கு மீண்டும் நம்பிக்கை வந்து விட்டன என அர்த்தம். இதுவும் கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக கூறலாம் . வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும் போது இந்திய பங்குச் சந்தை இன்னும் வளர்ச்சி பாதையில் இருக்கும். தன்னுடைய பழைய உச்சநிலையை படிப்படியாக எட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இதுவும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவை நோக்கி வருவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இந்தியாவில் மேக்ரோ பொருளாதார குறியீடுகள் வலுவாக இருப்பதும் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது போன்ற தகவல்களும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை நம்பி முதலீடு செய்ய வைத்திருக்கின்றன.
பருவமழையை சரியான நேரத்தில் தொடங்கி இருப்பது , மக்களிடையே நுகர்வு போக்கு அதிகரித்து இருப்பது, மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரக்கூடிய பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவையும் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளன .கடந்த ஆறு மாதங்களில் பார்க்கும்போது மே மாதத்தில் தான் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தன.
மே மாதத்தில் மொத்தம் 19 , 860 கோடி ரூபாயை வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இந்திய பங்குச் சந்தையில் நம்பிக்கையுடன் முதலீடு செய்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஜனவரியில் 34,000 கோடியையும் பிப்ரவரியில் 78 ,000 கோடியையும் இந்திய தந்தையிலிருந்து திரும்ப பெற்றன. இந்த காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தைகள் பெரிய சரிவை கண்டன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications