இந்திய பங்குச் சந்தை இன்று திங்கட்கிழமை காலை வர்த்தகம் மிகவும் வலுவான தொடக்கத்தை பதிவு செய்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 549 புள்ளிகள் உயர்ந்து 81,049 புள்ளிகளை தொட்டது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி50 குறியீடு 180 புள்ளிகள் உயர்ந்து 24,526.40 புள்ளிகளை எட்டியது. ஆனால் அடுத்த 2 மணிநேரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டின் வளர்ச்சி பாதியாக குறைந்தது.
இன்றைய உயர்வுக்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன, இதில் முக்கியமானது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மன மாற்றம். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FPIs) இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பங்குகளை அதிகளவில் விற்று வந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து அதிகப்படியான பங்குகளை வாங்கி வருகின்றனர்.

கடந்த 12 வர்த்தக நாளில் மட்டுமே, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 40,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இதே வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1.29 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டு கொள்கையில் ஏற்பட்ட திடீர் மனமாற்றத்திற்கு முக்கியமான காரணம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் பதிவான நிலையான உயர்வு தான்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மன மாற்றத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் 2.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, இது வருடாந்திர அடிப்படையில் 12.6% வளர்ச்சியாகும். இதன் மூலம் உள்நாட்டில் வர்த்தகம் மற்றும் பொருட்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அமெரிக்க டாலர் குறியீடு ஜனவரியில் 111-ஐத் தொட்ட பின்னர், தற்போது 100-க்கு கீழே குறைந்துள்ளது. இது, வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. டாலர் மதிப்பு சரிவால் வளர்ந்து வரும் நாடுகள் சந்தையில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்கள் தணிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இதேவேளையில் இந்திய நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நான்காம் காலாண்டு முடிவுகள் பெரும்பாலும் லாபகரமாகவும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதால் பங்குச்சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications