அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றன. இந்திய சந்தையானது தொடர்ந்து இரண்டாவது வாரமாக அழுத்தத்தில் காணப்பட்டது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழுத்தம் நிலவி வரும் வங்கி நெருக்கடிக்கு மத்தியில், இரண்டு வாரமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
இதற்கிடையில் மார்ச் 24 நிலவரப்படி, அன்னிய முதலீடுகள் என்பது 7233 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.
அன்னிய முதலீடுகள்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 3% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றது.
என்.எஸ்.டி.எல் தரவின் படி, அன்னிய போர்ட்போலியோ முதலீடானது மார்ச் 24, 2023ன் படி 7233 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. இதே மார்ச் 18, 2023 நிலவரப்படி 11,495 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த வாரத்தினை காட்டிலும் 4262 கோடி ரூபாய் குறைவாக இருந்தது.
மாத தொடக்கத்தில் என்ன நிலவரம்?
இது ஆரம்ப நாட்களில் 15,446 கோடி ரூபாயாக இருந்தது. இது அதானி குழுமத்தின் மெகா ஒப்பந்தம் காரணமாக இருந்தது. இது மார்ச் 1 மற்றும் மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில் 13,540 கோடி ரூபாயாக இருந்தது.
இவ்வவு சரிவா?
அமெரிக்காவின் வங்கிகள் மத்தியில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், தொடர்ந்து பங்கு சந்தைகளில் செல்லிங் அழுத்தமான இருந்து வருகின்றது. இதன் காரணமாக சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக கடந்த மார்ச் 11 - மார்ச் 24 வரையிலான காலகட்டத்தில் 6,307 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் குறைந்துள்ளன.
அதிகம் வாங்கிய துறை
மார்ச் 25 வரையிலான காலக்கட்டத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் என்.எஸ்.டி.எல் தரவின் படி 6192 கோடி ரூபாயாக உள்ளது. இதில் மிகப்பெரிய ஒப்பந்தங்களும் அடங்கும்.
இதில் முதலீட்டாளர்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் நிறுவனங்களை அதிகம் வாங்கியுள்ளனர். இது தவிர நிதி சேவை நிறுவனங்கள், மெட்டல்ஸ் மற்றும் சுரங்கம், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகள் அடங்கும்.
சென்செக்ஸ் நிலவரம்?
இதற்கிடையில் மார்ச் மாதத்தில் இதுரையில் சென்செக்ஸ் 1884 புள்ளிகள் அல்லது 3.2% சரிவினைக் கண்டும், இதே நிஃப்டி 506 புள்ளிகள் அல்லது 2.9% சரிவிலும் காணப்பட்டது.
கடந்த வார இறுதியில் சென்செக்ஸ் 57,527.10 ஆக முடிவடைந்துள்ளது, இதே நிஃப்டி 131.85 புள்ளிகள் அல்லது 0.77% சரிவினைக் கண்டு, 16,945.05 ஆகவும் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications