பங்குவர்த்தகம் தொடங்கியதுமே பெரும் சரிவை சந்தித்த பாரதி ஏர்டெல், இன்போசிஸ் பங்குகள்

மும்பை: வெள்ளிக்கிழமையான இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதுமே பாரதி ஏர்டெல், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவினை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதுமே 30 புள்ளிகள் சரிந்து 40,542 புள்ளிகளாக வர்த்தகம் ஆகியது. அதேநேரம் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி உயர்வுடன் ஆரம்பித்தது. காலை 9.30 மணி நிலவரப்படி 11,950 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகி கொண்டிருந்தன.

பங்குவர்த்தகம் தொடங்கியதுமே பெரும் சரிவை சந்தித்த  பாரதி ஏர்டெல், இன்போசிஸ் பங்குகள்

இன்றைய பங்கு வர்த்தக தொடக்கத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் தான் மிக அதிக பட்சமாக சரிவினை அதாவது ஒரு சதவீதம் சந்தித்தது. அதேசமயம் என்டிபிசி, பவர் கிரிட், சன் பார்மா, ஐடிசி மற்றும் ஆர்ஐஎல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1 சதவீதம் முதல் 2.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.

12 ஆயிரத்துக்கும் குறைவாகவே நிப்டி வர்த்தகம் ஆகி வருகிறது. நேற்று அனைத்து நேரங்களில் உச்சபட்ச உயர்வான 12100ஆக இருந்தது. இன்று பலரும் லாபம் கருதி விற்பனை செய்து வருவதால் ஏற்ற இறக்கங்களுடன் உள்ளது.

அமெரிக்காவுடனான முக்கியமான மினி ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு ஒரு கூட்டத்தை நடத்த சீனா முன்வந்ததாக வெளியான செய்திகளில் பெரும்பாலான ஆசிய சந்தைகள் இன்று உயர்ந்து காணப்பட்டன.

இதனிடையே நிப்டி பங்கு வர்த்தகம் காலை 9.45 மணி நிலவரப்படி 27 புள்ளிகள் சரிந்து 11,940 ஆக இருந்தது மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிந்து 40, 496 ஆக வர்த்தகம் ஆகியிருந்தது .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+