அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். பணி நீக்கம், அதிகரித்து வரும் வட்டி விகிதம், ஏற்ற இறக்கம் இருந்து வரும் நிலையில் சந்தையில் பெரியளவிலான தாக்கம் இருந்து வருகின்றது.
ஜனவரி 2003ல் ரூபாய் 1 க்கு கீழாக இருந்த 22 பங்குகள், கடந்த 20 ஆண்டுகளில் 11,000% மேலாக ஏற்றத்தில் காணப்படுகிறது.
ஜோதி ரெசின்ஸ் பங்கின் விலையானது 359345% வளர்ச்சியினை கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது ஜனவரி 2003ல் 0.33 ரூபாயாக இருந்தது. இது ஜனவரி 20, 2023ல் 1198.15 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கினில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு, 3.50 கோடி ரூபாயாக இருக்கும்.

என்னென்ன பங்குகள்?
இதே சிம்போனி நிறுவனம் 2,92,264 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இது 0.33 ரூபாயில் இருந்து, 964.80 ரூபாய் என்ற அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.இதே போரோசில் ரீனிவபிள்ஸ் 1,92,058 சதவீத ஏற்றத்திலும், இதே ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1,28,761%, ரிலாக்ஸோ புட்வேர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 96,618% ஏற்றத்திலும், கைடெக்ஸ் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 94,413% ஏற்றத்திலும் உள்ளது. இது தவிர பல முக்கிய பங்குகளும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது.

லாகிஸ்டிக்ஸ் பங்குகள்
இந்த பங்குகள் அனைத்தும் ஜனவரி 2003ல் 1 ரூபாய்க்கு கீழாக இருந்தது. இதில் சிம்போனி நிறுவனத்தின் பங்கினை வாங்கலாம் என ஆனந்த ரதி பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் லாகிஸ்டிக்ஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. போட்டி என்பது இந்த துறையில் அதிகரித்து வந்தாலும், தொடர்ந்து நிறுவனம் தனது நெட்வொர்க்கானது விரிவடைந்து வருகின்றது.

பென்னி பங்குகள்
இதுவும் கடந்த மாதத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இது மட்டும் அல்ல, பாக்லி மெடிக்யூர், யுபிஎல், லுலுலாய்டு மெட்டல்ஸ் & எனர்ஜி, மணப்புரம் பைனான்ஸ், ஏஜிஸ் லாகிஸ்டிக்ஸ், லா ஓபாலா ஆர்ஜி, எலகான் இன்ஜினியரிங் நிறுவனம், குல்ஷன் பாலியோல்ஸ் போன்ற நிறுவனங்களும் கடந்த 20 ஆண்டுகளில் 50,000% மேல் உயர்ந்துள்ளது. இந்த பங்குகள் அனைத்தும் 2003ல் பென்னி பங்குகளாக இருந்தன.

எவ்வளவு லாபம்?
உள்நாட்டு பங்கு சந்தையில் செல்வத்தை உருவாக்குவது எப்படி என்ற நிலையில், முதலீட்டாளர்கள் நம்பிக்கையாக இருக்க வேண்டும். வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்க வேண்டும்.
கணேஷ் பென்சோப்ளாஸ்ட், ஹெச்சிபி பிளாஸ்டீன் பல்க்பேன், குஜராத் அம்புஜா எக்ஸ்போர்ட்ஸ், சுக்ரா பார்மாசூட்டிகல்ஸ், மோல்ட் டெக் டெக்னலாலஜிஸ், ஜாஸ்ச் இண்ஸ்டஸ்ட்ரீஸ், பன்சாலி இன்ஜினியரிங் பாலிமர்ஸ் மற்றும் நிக்கோ பார்க்ஸ் & ரிசார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் இதே காலகட்டத்தில் 10,000% முதல் 50,000% வரையில் லாபம் கொடுத்துள்ளது.

பங்குகள் அதிகரிக்கலாம்
பங்கு சார்ந்த முதலீட்டாளர்களுக்கு எல்&டி, பிஹெச்இஎல், சீமென்ஸ், தெர்மாக்ஸ், டெக்னோ எலக்ட்ரிக், ஆஸ்ட்ரல், கிரீன் பேனல், செஞ்சுரி ப்ளை, பீனிக்ஸ் மில்ஸ், பிரிகேட் எண்டர்பிரைசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஜேகே சிமெண்ட், ஜேகே லட்சுமி, ஜேஎஸ்பிஎல், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், ஹெச்.ஏ.எல், பெல், சோலார், டிசிஐ எக்ஸ்பிரஸ், கதி, ஓ.என்.ஜி.இ, ஐஓசிஎல், ஐஜிஎல், எண்டிபிசி, என்.ஹெச்.பி.சி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ், குஜராத் ப்ளோரோகெமிக்கல்ஸ், தத்வா சிந்தன், அசோக் லேலாண்ட், மஹிந்திரா சிஐஇ, பால்கிருஷ்ணா இண்ஸ்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டி, டோரண்ட் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீட்டு சுழற்சி மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கலாம். இதனால் இந்த பங்குகள் பலன் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய பங்குகள்
எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஆதித்யா பிர்லா கேப்பிட்டல், எஸ்பிஐ லைஃப் அன்ட் எல்ஐசி நிறுவனங்கள் தொடர்ந்து கடன் வளர்ச்சி மற்றும் இன்சூரன்ஸ் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.
ஐடிசி, ஜோதி லாப்ஸ், ஜீபிலண்ட், சப்பையர் புட்ஸ், இண்டிகோ, டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், இண்டியா மார்ட், டெல்லிவரி, ஹெவல்ஸ், க்ராம்ப்டன் என பல நிறுவனங்களின் நுகர்வு அதிகரிப்பால் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.