பங்குச் சந்தையில் ஒரு வருட காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? 10%, 20% அல்லது 100%? ஆனால், சில ஜாக்பாட் பங்குகள் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்து, முதலீட்டாளர்களுக்கு லாப மழையை பொழிந்துள்ளன.
அதுவும் கடந்த பட்ஜெட்டிற்கும் இந்த பட்ஜெட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில். இந்திய பங்குச் சந்தையில் உள்ள சில பங்குகள் 3400% வரை அசுர வளர்ச்சியை எட்டி மல்டிபேக்கர்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, கமாடிட்டி ஜாம்பவானான MCX முதல் உலோக துறையில் பட்டையை கிளப்பும் ஹிந்துஸ்தான் காப்பர் வரை, சில குறிப்பிட்ட பங்குகள் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சந்தையே ஒரு விதமான பதற்றத்தில் இருக்கும்போது, இந்த 5 பங்குகள் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்தன? அந்த மல்டிபேக்கர் லிஸ்டில் இருக்கும் மற்ற பங்குகள் எவை? அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.
கரடியின் பிடியில் சிக்கிய சந்தை?
கடந்த ஓராண்டு காலம் இந்திய பங்குச் சந்தைக்கு பெரும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகள், உலகளாவிய வர்த்தக போர் அச்சம், அமெரிக்கா-ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான புவிசார் அரசியல் பதற்றங்கள் என பல காரணங்களால் சந்தையில் இருந்து, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதுபோன்ற பல காரணிகள் மத்தியில் சந்தையானது கரடியின் பிடியில் சிக்கியது. இருப்பினும், இத்தனை தடைகளையும் மீறி கடந்த 2025 பட்ஜெட் முதல் தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2026 வரையிலான காலகட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த 5 மல்டிபேக்கர் (Multibagger) பங்குகள் இதோ.
கடந்த பட்ஜெட் முதல் கலக்கிய 5 ஜாக்பாட் பங்குகள்!
மிட்வெஸ்ட் கோல்ட் (Midwest Gold)
மிட்வெஸ்ட் கோல்ட் பங்கின் வளர்ச்சி தான் பட்டியலிலேயே முதலிடம் பிடிக்கிறது. கடந்த பட்ஜெட்டின் போது வெறும் 155-க்கு விற்பனையான ஒரு பங்கின் விலை, தற்போது பிஎஸ்இ-யில் 5506 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மூலம் முதலீட்டாளர்களுக்கு 3400% லாபத்தை வழங்கியுள்ளது. 2026 பட்ஜெட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 5% உயர்ந்த இப்பங்கு, ஜனவரியில் மட்டும் 15% வளர்ச்சியை எட்டியுள்ளது.
GHV இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் (GHV Infra Projects)
உள்கட்டமைப்பு துறையை சேர்ந்த GHV இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பங்கு, கடந்த பட்ஜெட்டிற்கு பிறகு 28 ரூபாயிலிருந்து 229 ரூபாய் வரை உயர்ந்து 700% லாபத்தை ஈட்டியுள்ளது. ஆகஸ்ட் 2025-ல் 362 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட இப்பங்கு, அதன் பிறகு உச்சத்தில் லாபத்தை புக் செய்ததால் சற்று குறைந்து காணப்படுகிறது.
சிந்திகோ ஃபாயில்ஸ் (Synthico Foils)
உள்கட்டமைப்பு சார்ந்த மற்றொரு பங்கான சிந்திகோ ஃபாயில்ஸ், கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு 725% லாபத்தை வழங்கியுள்ளது. இதன் விலை 223 ரூபாயில் இருந்து, 1,839 ரூபாயாக உயர்ந்து முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper):
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றத்தால் அதிகம் பயனடைந்த நிறுவனம் இது. உலோக விலைகளின் உயர்வு அதன் நிதி அறிக்கையை வலுப்படுத்தியது. கடந்த ஓராண்டில் 239 ரூபாயில் இருந்து 676 ரூபாய் வரை உயர்ந்து 180% லாபத்தை வழங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் அதன் வளர்ச்சி 175% என்பது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் (MCX)
இந்தியாவின் முன்னணி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான எம்சிஎக்ஸ், கடந்த பட்ஜெட்டில் இருந்து தனது முதலீட்டாளர்களுக்கு சுமார் 120% லாபத்தை வாரி வழங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications