கிரிப்டோ கரன்சிகளில் அதிக மதிப்பு கொண்ட கிரிப்டோ கரன்சியாக பிட்காயின் இருக்கிறது. பிட்காயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது.
சனிக்கிழமை அன்று ஒரு பிட்காயின் மதிப்பு 1,17, 906 டாலர்கள் என்ற மதிப்பை எட்டியது. ஒரே வாரத்தில் பிட்காயின் மதிப்பு கிட்டத்தட்ட 9 சதவீதம் உயர்ந்தது. ஒரு பிட்காயின் மதிப்பு என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் பார்த்தால் 1,1,24,000 ரூபாய் ஆகும். 2009ஆம் ஆண்டில் ஒரு பிட்காயின் வாங்கி வைத்திருந்தால் கூட அவர்கள் அனைவரும் இந்நேரம் கோடீஸ்வரர்களாக மாறியிருப்பார்கள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிட்காயின் மதிப்பு 0.04865 டாலர்கள் தான். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது அன்றைய நாளில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 46 ரூபாயாகத்தான் இருந்தது. அப்படி என்றால் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிட்காயின் மதிப்பு 2.25 ரூபாய். ஆனால் தற்போது அதன் மதிப்பு 1,17,000 ஆயிரம் டாலர்கள் என்பதை கடந்திருக்கிறது. இந்திய ரூபாயில் 1.1 கோடி ரூபாய்.
15 ஆண்டுகளில் பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது 44.80 லட்சம் மடங்கு உயர்ந்திருக்கிறது, அதாவது 44.60 கோடி சதவீதம் பிட்காயின் மதிப்பு வளர்ந்துள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பது இதற்கு மிக முக்கிய காரணம். அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டவர். அமெரிக்க சந்தையில் பிட்காயின் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதும் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
மேக்ரோ பொருளாதார காரணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை ஆகிய இரண்டும் தான் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு காரணம் என BuyUcoin நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சிவம் தாகிரல் தெரிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் வர்த்தக மோதல்கள் பாதுகாப்பான முதலீட்டை சந்தையாக கிரிப்டோ கரன்சிகளை மாற்றி இருக்கின்றன, நீண்ட கால நோக்கில் இவை நல்ல லாபம் தரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது முக்கிய காரணம் எனக் கூறுகிறார்.
டெக்னிகல் ரீதியாக ஆய்வு செய்தால் பிட்காயின் வலுவாக மேல் நோக்கிதான் செல்லும் என்பதை காட்டுகிறது என Pi42 நிறுவனர் அவினாஷ் சேகர் கூறுகிறார். சனிக்கிழமை அன்று நிலவரப்படி பார்க்கும்போது பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 2.24 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது. கிரிப்டோ கரன்சி சந்தையில் பிட்காயின் 63.8% ஆதிக்கத்தை கொண்டிருக்கிறது .
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications