பங்குச்சந்தை முதலீடுகள் என்பது ஒரு கலை, அனைவருக்கும் அந்த கலை கைவந்து விடுவது கிடையாது. ஏனெனில் சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் முதலீடு செய்பவர்கள் தான் அதன் பலனை அறுவடை செய்ய முடிகிறது. அந்த வகையில் பங்குச்சந்தைகளில் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்குகளை நாம் தேர்வு செய்வதற்கு முன்பு பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக அந்த நிறுவனம் எந்த துறையை சார்ந்து இயங்குகிறது அந்தத் துறைக்கு தற்போது நம் நாட்டில் வளர்ச்சி இருக்கிறதா என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும். இதைத் தாண்டி நிறுவனத்தின் கடன் அளவு,நிறுவனத்தின் பங்குகள் யாரிடமெல்லாம் இருக்கின்றன என்பன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பிறகுதான் முதலீட்டு முடிவையே எடுக்க வேண்டும்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட துறை சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக கூறுகிறார் பிரபல முதலீட்டு ஆலோசகரான சர்தாக் அஹுஜா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் ,இந்தியாவில் தற்போது பவர் கேபிள், டிரான்ஸ்பார்மர்கள், கண்டக்டர்கள் மற்றும் மின்சார தயாரிப்புக்கான உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்கு உதாரணமாக ஒரு பங்கையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
டைமண்ட் பவர் இஃன்பிராஸ்டிரக்சர் நிறுவனத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 1.2 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும் என கூறுகிறார். 2023 ஆம் ஆண்டு இதன் ஒரு பங்கு மதிப்பு 2.2 ரூபாயாக தான் இருந்தது தற்போது 138 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. இந்த கிட்டத்தட்ட 6000% வளர்ச்சி என குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்த நிறுவனத்தின் வருமானமும் பெரிய அளவு உயர்ந்து இருக்கிறது என குறிப்பிடுகிறார்.
2023ஆம் நிதியாண்டில் 16 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் வருவாய், 2025 ஆம் நிதியாண்டில் 1100 கோடி ரூபாய் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு ஆர்டர்கள் அதிகரித்ததே இதன் வருமானம் அதிகரித்து இதன் பங்கு மதிப்பு உயர்வதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது என கூறுகிறார். இந்த ஒரு பங்கை மட்டுமே நாம் கவனிக்கக்கூடாது. இதே துறையில் இயங்கும் ஃபினோலெக்ஸ், பாலி கேபிள் பங்குகளும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன என சுட்டிக்காட்டுகிறார்.
எனவே முதலீடு செய்யும்போது அது எந்த துறை சார்ந்த இயங்குகிறது என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார். டைமண்ட் பவர் இன்ஃபிரா நிறுவனத்தை பொறுத்தவரை பவர் கேபிள், டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு துறையாக இந்த துறை இருக்கிறது என்பதே இது காட்டுவதாக அவர் கூறுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications