விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினத்தில் பங்குச்சந்தை விடுமுறை குறித்து முதலீட்டாளர்களிடையே நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) ஆகியவை ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மாநில விடுமுறை என்பதால், மும்பையில் அமைந்துள்ள பங்குச்சந்தைகளும் அன்றைய தினம் செயல்படாது. இதனால் பங்கு, டெரவேட்டிவ் வர்த்தகம், கடன் பத்திரங்கள் என எந்த வர்த்தக நடவடிக்கையும் இருக்காது.

பிஎஸ்இ இணையதளத்தில் 2025ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலில் ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்திக்காக இந்தியப் பங்குச்சந்தை மூடப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதன்கிழமை அன்று வர்த்தகம் முழுமையாக நிறுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஈக்விட்டி செக்மென்ட், ஈக்விட்டி டெரிவேடிவ் செக்மென்ட், எஸ்எல்பி செக்மென்ட் மற்றும் கரன்சி டெரிவேடிவ்ஸ் செக்மென்ட் ஆகியவற்றில் வர்த்தகம் நிறுத்தப்படும். மேலும், என்டிஎஸ்-ஆர்எஸ்டி மற்றும் டிரை-பார்ட்டி ரெப்போ செக்மென்ட்களும் மூடப்பட்டிருக்கும்.
கமாடிட்டி டெரிவேடிவ்ஸ் செக்மென்ட் மற்றும் எலக்ட்ரானிக் கோல்ட் ரிசிப்ட்ஸ் (EGR) செக்மென்ட்டில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வர்த்தகம் இருக்காது. ஆனால், வழக்கமான வர்த்தக நேரம் முடிந்த பிறகு, புதன்கிழமை மாலை 5:00 மணிக்கு வர்த்தகம் மீண்டும் தொடங்கும்.
ஆகஸ்ட் 2025 இல் இரண்டு வர்த்தக விடுமுறைகள் உள்ளன. முதல் விடுமுறை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இருந்தது. இரண்டாவது விடுமுறை ஆகஸ்ட் 27 அன்று விநாயகர் சதுர்த்திக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு, இந்த ஆண்டு மேலும் ஐந்து பங்குச்சந்தை விடுமுறைகள் உள்ளன. அக்டோபரில் மூன்று விடுமுறைகளும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தலா ஒரு விடுமுறையும் இருக்கும். அக்டோபர் 2025 இல் மகாத்மா காந்தி ஜெயந்தி/தசரா (அக்டோபர் 2), தீபாவளி லட்சுமி பூஜை (அக்டோபர் 21), தீபாவளி பலிபிரதிபாடா (அக்டோபர் 22) ஆகியவை விடுமுறை நாட்களாகும்.
நவம்பர் 5, 2025 அன்று குரு நானக் பண்டிகை மற்றும் டிசம்பர் 25, 2025 அன்று கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் விடுமுறைகள் உள்ளன.
பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை தொடங்குகிறது. விநாயகர் சிலைகள் நிறுவுதல் மற்றும் முக்கிய கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 27 அன்று மதிய பூஜைக்குரிய சுபமுகூர்த்தத்தில் நடைபெறும். பஞ்சாங்க தகவலின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 27, 2025 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது, இது செப்டம்பர் 6, 2025 சனிக்கிழமை விநாயகர் விசர்ஜனத்துடன் முடிவடையும்.


Click it and Unblock the Notifications