அதானி ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைகளுக்கு மத்தியில் அதானி குழும நிறுவனங்கள் சரிவினை ஒரு புறம் கண்டது எனில், மறுபுறம் அதானி குழுமத்தில் முதலீடு செய்த எஸ்பிஐ மற்றும் எல்ஐசி பங்குகளும் சரிவினைக் கண்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம், கெளதம் அதானியின் அதானி குழுமத்தின் மீது பற்பல மோசடியான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் எஸ்பிஐ வங்கியானது டிசம்பர் காலாண்டில் வலுவான வளர்ச்சியினை கண்ட நிலையிலும், எஸ்பிஐ பங்கானது பலத்த ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது.
முதலீடு செய்யணுமா?
எனினும் தற்போது அதானி குழும பங்குகள் பலவும் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருந்தாலும், ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு நிலையற்ற ஒன்றாக உள்ளது. இந்த காலகட்டத்தில் எஸ்பிஐ தரமான ஒரு பங்காக இருந்தாலும், இதில் முதலீடு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
இது குறித்து பங்கு சந்தை நிபுணர்கள், பண்டமெண்டல் மற்றும் டெக்னிக்கல் ரீதியாகவும் எஸ்பிஐ பங்கு விலையானது நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கின்றனர். இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை எதிர்பார்ப்பு
மூன்றாவது காலாண்டில் டெபாசிட் வளர்ச்சியானது குறைவாக உள்ளது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் எஸ்பிஐ-யின் வளர்ச்சி என்பது சாதகமான வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் இப்பங்கினை அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளார். இதன் விலையானது 730 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தற்போதைய லெவல்?
எஸ்பிஐ பங்கு விலையானது தற்போது சுமார் 545 ரூபாய் என்ற லெவலை என்.எஸ்.இ-யில் எட்டியுள்ளது. இது நீண்டகால நோக்கில் 35% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் இப்பங்கின் விலையானது கடந்த டிசம்பர் காலாண்டில் நல்ல லாபத்தினை கண்டுள்ளது. இது எதிர்பார்ப்பினையும் உடைத்து காட்டியுள்ளது.
நிகரலாபம்
இதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 62% அதிகரித்து, 15,477 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 14,205 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகரலாபம் 68% அதிகரித்து, 14,205 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8431.9 கோடி ரூபாயாக இருந்தது.
வட்டி வருவாய்
இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது 24% அதிகரித்து, 38,069 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனை நிபுணர்கள் 36,948 கோடி ரூபாயாக இருந்தது. இது அதன் கடன் புத்தகத்திலும் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.
எஸ்பிஐ கடன்
அதானி குழுமத்திற்கு எஸ்பிஐயின் மொத்த கடன் 0.90% ஆக உள்ளது. ஆக இதனால் பெரியளவில் பிரச்சனை இல்லை. எனினும் அதானி குழுமத்திற்கு ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு எதிராக தன்னை நிலை நிறுத்தாவிட்டால், 9 - 10 மாதங்களில் கடனை மீட்க வேண்டிய நிலை வரும் என்றும் எச்சரித்துள்ளது.
எல்ஐசி
எஸ்பிஐ மட்டும் அல்ல, எல்ஐசி பங்கிலும் ஏற்ற இறக்கம் என்பது சற்றே இருந்து வந்த நிலையில், இனி அந்த பங்குகளினை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications