அதானிக்கு வில்லன் ஹிண்டன்பர்க்.. ஜென்சோலுக்கு வில்லான இக்ரா.. 82% சரிந்த பங்கு விலை

ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் சோலார் எனர்ஜி மற்றும் இபிசி தீர்வுகள் வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மால்கேப் பங்கான ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் சமீபகாலமாக தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. 2024 ஜூனில் இப்பங்கின் விலை சாதனை உச்சத்தை தொட்டது. அது முதல் இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. குறிப்பாக இக்ரா மற்றும் கேர் ஆகிய மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் கடன் மதிப்பீடுகளை குறைத்தது முதல் இப்பங்கின் விலை சரிவு தொடங்கியது.

அப்போது, ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் கடன் சேவை பதிவு தொடர்பாக பகிர்ந்த ஆவணங்கள் பொய்யானவை என இக்ரா குற்றம் சாட்டியது. மேலும், ஜென்சோல் நிறுவனத்தின் பணப்புழக்க நிலை மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. தாமதமான கடன் சேவை காரணமாக கேர் நிறுவனம் ஜென்சோல் நிறுவனத்தின் மதிப்பீட்டை குறைத்தது. அதேசமயம் ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் அன்மோல் சிங் ஜக்கி, எந்த தவறும் செய்யவில்லை என்றும், குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு சுயாதீனக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.

இக்ராவின் குற்றச்சாட்டால் அடி வாங்கிய ஜென்சோல் பங்குகள்

ஆனாலும் ஜென்சோல் பங்கின் விலை சரிவு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி 21 முதல் இதுவரையிலான கடந்த 29 வர்த்தக தினங்களில் இப்பங்கின் விலை 2 முறை மட்டுமே உயர்ந்தது. கடந்த மார்ச் 19ம் தேதியன்று இப்பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்தது. அடுத்து கடந்த 3ம் தேதியன்று பங்கின் விலை 3 சதவீதம் உயர்ந்தது. பங்குகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பங்குகளை மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் (இஎஸ்எம் நிலை 1) கட்டமைப்பின்கீழ் வைக்க பந்குச்சந்தைகளை தூண்டியுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் பங்கு விலை 5 சதவீதம் குறைந்து லோயர் சர்க்கியூட் அடித்தது. இந்நிலையில் இன்றும் இப்பங்கின் விலை 5 சதவீதம் சதவீதம் குறைந்து லோயர் சர்க்கியூட் அடித்து ரூ.147.55ஆக சரிந்தது. இப்பங்கின் விலை உச்சத்தை தொட்ட அடுத்த பத்து மாதங்களில் சுமார் 87 சதவீதம் தடாலடியாக வீழ்ச்சி கண்டுள்ளது.

2024 ஜூன் 24ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,125.75ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.147.55க்கு சரிந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி மீது வைத்த குற்றச்சாட்டால், அதானி குழும நிறுவன பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. இருப்பினும் பின்னர் அவை சரிவிலிருந்து மீண்டன.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+