1422.67% உயர்ந்த கம்பெனி லாபம்.. 20% உயர்வில் பங்குகள்.. ஜெட் ஸ்பீடில் 2 ரூபாய் பென்னி பங்கு..!!

ஜிஜி இன்ஜினியரிங் (GG Engineering)பங்குகள் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சிறப்பான ஏற்றத்தில் வர்த்தகம் செய்து வருகின்றது. பங்குகள் சுமார் 20% உயர்வில் ரூ.1.90 ஆக வர்த்தகமாகிறது. இந்த மைக்ரோகேப் எலக்ட்ரானிக் எக்யூப்மெண்ட்ஸ் துறையின் பென்னி பங்கு கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. ஆனால் நேற்று வெளியான நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் காலாண்டு முடிவுகளை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 1422.67% உயர்ந்து ரூ.11.42 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

பங்குச் சந்தைகளும் இன்றைய வர்த்தகத்தை சீரான நிலையில் தொடங்கியது. ஆரம்பத்தில் சென்செக்ஸ் 16 புள்ளிகள் அதிகரித்து 80098 என்ற அளவிலும், நிஃப்டி 23 புள்ளிகள் சரிவுடன் 24413 என்ற அளவிலும் துவங்கியது. இதற்கிடையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ஸ்மால்கேப் நிறுவனமான ஜிஜி இன்ஜினியரிங் பங்குகள் 20 சதவீத உயர்வை எட்டியுள்ளன. நிறுவனம் வியாழன் அன்று நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்ட பிறகு இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே முதலீட்டாளர்களின் ஆர்வத்தினால் தொடர்ந்து இந்த பங்குகளில் நல்ல ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 1422.67% உயர்ந்த கம்பெனி லாபம்.. 20% உயர்வில் பங்குகள்.. ஜெட் ஸ்பீடில் 2 ரூபாய் பென்னி பங்கு..!!

இன்றைய வர்த்தகத்தில் பென்னி பங்கு ஆன ஜிஜி இன்ஜினியரிங் லிமிடெட் பங்குகள் புதன்கிழமையின் வர்த்தக விலையான ரூ.1.59 லிருந்து சுமார் 20 சதவீதம் அதிகரித்து ரூ.1.90 ஆக துவங்கியது. கடந்த ஐந்து நாட்களாக இந்த பங்கு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. நிறுவனம் 2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான முடிவுகளை நேற்று பங்குச் சந்தை மூடப்பட்ட பின்னர் அறிவித்தது. அதன் பிறகு நிறுவனம் ரூ.11 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு இதே காலாண்டில், நிறுவனம் 1 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது. அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஜிஜி இன்ஜினியரிங் நிறுவனம் 2 கோடி ரூபாய் நிகர இழப்பை பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 2023 காலாண்டில் 0.75 கோடியாக இருந்த ஜி ஜி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 2024 காலாண்டில் 1422.67% அதிகரித்து ரூ.11.42 கோடியாக இருந்தது. செப்டம்பர் 2024 இல் முடிவடைந்த காலாண்டில், செப்டம்பர் 2023 இல் முடிவடைந்த காலாண்டில் விற்பனை 44.33% அதிகரித்து ரூ 73.24 கோடியிலிருந்து ரூ 105.71 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருவாய் 45 சதவீதம் அதிகரித்துள்ளது: இது தவிர, இந்த நிறுவனம் 2024 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வருவாயில் 45 சதவீதத்திற்கும் அதிகமான வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது ரூ.106 கோடியாக இருந்தது. அதேசமயம், 2024ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.73 கோடியாக இருந்தது. அறிக்கையிடப்பட்ட காலாண்டில் EBITDA ரூ.13 கோடியாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவான ரூ. 1 கோடியை விட அதிகமாகும்.

ஒரு வருடத்தில் 60 சதவீதம் வருமானம்: ஜிஜி இன்ஜினியரிங் லிமிடெட் கட்டமைப்பு ஸ்டீல், விவசாய குழாய், TOR ஸ்டீல் போன்ற தயாரிப்புகளின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. அதன் தயாரிப்புகள் உள்கட்டமைப்பு, கட்டுமானம், மற்ற இன்ஜினியரிங் அமைப்புகளைப் போன்ற மெகா திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பங்கு கடந்த ஒரு மாதத்தில் பெரும்பாலான வர்த்தக அமர்வுகளில் சரிவை பதிவு செய்துள்ளது. அதே சமயம் முதலீட்டாளர்கள் 6 மாத காலத்தில் 10 சதவீதம் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆனால், ஓராண்டில் சுமார் 60 சதவீதம் லாபம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், தற்போதைய 12.20 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 29.21 புள்ளிகள் சரிந்து 80058 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 30.75 புள்ளிகள் சரிவில் 24406 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின்றன.

குறிப்பாக ஜிஜி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 19.50% அதிகரிப்பில் ரூ.1.90 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ.2.97 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.1.14 ஆகவும் உள்ளது. சந்தை மதிப்பு ரூ.301.05 கோடியாக உள்ளது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+