மும்பை: சர்வதேச அளவில் பங்கு சந்தையில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், பங்கு சந்தையில் தற்போது முதலீடு செய்யாலாமா? வேண்டாமா? என ஏற்கனவே முதலீடு செய்பவர்கள் மத்தியில் கூட கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும் இந்த காலகட்டத்திலும் சந்தை ஆய்வாளர்கள் சில பங்குகளை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
சென்செக்ஸ் சரிவு
இதற்கிடையில் சர்வதேச தரகு நிறுவனமான ஜெஃபரீஸ், ஜேபி மார்கன், CLSA மற்றும் நோமுரா என பல தரகு நிறுவனங்களும், நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் சில பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளன. நடப்பு நிதியாண்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் பி.எஸ்.இ சென்செக்ஸ் சுமார் 2% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
நிஃப்டி சுமார் 3% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், சந்தையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.
40% வரையில் அதிகரிக்கலாம்
இது தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதம் மற்றும் காலாண்டு முடிவுகள் என வெளியான நிலையில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தற்போதும் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது நிலவி வருகின்றது.
ஆனாலும் இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில பங்குகள் 40% வரையில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு இலக்காக CLSA 2970 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 30% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. குறைந்தபட்சம் 4 மாதங்களில் இப்பங்கின் விலை 20% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
தொடர்ந்து இந்த நிறுவனம் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கேன் பைனான்ஸ் ஹோம்ஸ்
ஜெஃபரீஸ் தரகு நிறுவனம் கேன் பைனான்ஸ் ஹோம்ஸ் நிறுவனத்தினை வாங்க தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான இது கடன் மற்றும் liabilities பின்னடைவு காரணமாக மார்ஜின் விகிதம் எனொபது சரிவினைக் கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரையில் அதிகரிக்கப்பட்ட கடன் விகிதங்கள், 72% வீட்டுக் கடன்களில் முழுமையாக எதிரொலிக்கவில்லை. எனினும் இனி கடன் வளர்ச்சியானது வரவிருக்கும் காலாண்டுகளில் எதிரொலிக்கலாம். இது இந்த வங்கியின் பங்கு விலையில் எதிரொலிக்கலாம். ஆக இப்பங்கின் இலக்கு விலை 635 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
டைட்டன் நிறுவனம்
நடப்பு நிதியாண்டில் டைட்டன் நிறுவன பங்கின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச தரகு நிறுவனமாக ஜேபி மார்ஜன் இந்த நிறுவனத்தினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. மார்ச் 2024க்குள் இதன் பங்கு விலை 3000 ரூபாயினை எட்டலாம் என்றும், இது மார்ச் 20, 2023ல் இருந்து பார்க்கும்போது 20% மேலாக ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை சரியலாமோ என்ற அச்சத்தின் மத்தியில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது சரிவினைக் கண்டது. எனினும் நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபோ எட்ஜ்
தரகு நிறுவனமான நோமுரா இன்ஃபோ எட்ஜ் நிறுவன பங்கின் விலையானது 40% வரையில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் தொடர்ந்து வலுவான வணிக வளர்ச்சி மாடலை கொண்டுள்ளது. இது நீண்டகால நோக்கில் இந்த நிறுவனம் வளர்ச்சி காண காரணமாக அமையலாம்.
இதற்கிடையில் தான் இந்த நிறுவன பங்கினை வாங்கலாம் என தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையை 4940 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போது சுமார் 3472 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
அல்ட்ராடெக் சிமெண்ட், டால்மியா பாரத், ஜேகே சிமெண்ட்
ஜெஃபரீஸ் அறிக்கையின் படி, சர்வதேச அளவில் எரிசக்தி செலவினங்கள் குறைவதில் மிக முக்கிய பயனாளியாக இந்திய சிமெண்ட் நிறுவனங்கள் இருக்கக் கூடும். இதன் பலன் என்பது நடப்பு நிதியாண்டில் 4வது காலாண்டில் தொடங்கி, அடுத்த நிதியாண்டு வரையில் இருக்கலாம். தொழிற்துறையில் தேவையானது உயர்ந்து வரும் நிலையில், இது பங்குகளுக்கு சாதகமாக இருக்கலாம். இதன் காரணமாக அல்ட்ராடெக் சிமெண்ட், டால்மியா, பாரத் மற்றும் ஜேகே சிமெண்ட் ஆகியவை சிமெண்ட் பங்குகள் ஏற்றம் காணலாம்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications