பொதுவாக பங்குச் சந்தைகளின் பெரிய ஏற்றம் அல்லது சரிவின் பின்னணியில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களும் ஒரு முக்கிய காரணியாக எப்போதும் இருப்பார்கள். கடந்த 5 மாதங்களாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சி பாதையில் உள்ளன. இதற்கு அன்னிய முதலீட்டாளர்களும் ஒரு முக்கிய காரணம்.
2024 அக்டோபர் முதல் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 10 சதவீதம் சரிந்தது. மேலும், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இன்டெக்ஸ்கள் முறையே 19 மற்றும் 21 சதவீதம் சரிவடைந்துள்ளன.

2025ல் இம்மாதம் 14ம் தேதி வரையிலான 33 வர்த்தக தினங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். இந்த மாதம் இந்தியா போன்ற முக்கியமான வளரும் சந்தைகளில் (தாய்லாந்தை தவிர்த்து) அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததை காட்டிலும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இந்தியா (218.90 கோடி டாலர்), பிரேசில் (2.10 கோடி டாலர்), இந்தோனேஷியா (38.1 கோடி டாலர்), மலேசியா (5.90 கோடி டாலர்), தென்கொரியா (50 லட்சம் டாலர்) தைவான் (11.14 லட்சம் டாலர்) மற்றும் வியட்நாம் (23.5 கோடி டாலர்) ஆகிய நாடுகளில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதேசமயம் தாய்லாந்து பங்குச் சந்தையில் மட்டும் 1.70 கோடி டாலரை பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
அன்னிய நிறுவன முதலீ்ட்டாளர்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இது தொடர்பாக வாட்டர்பீல்ட் அட்வைசர்ஸின் மூத்த இயக்குனர் விபுல் போவர் கூறுகையில், அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் அமெரிக்க சொத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பத்திரங்கள் ஆதாயம் கொடுப்பதால் இது பாதுகாப்பான முதலீடாக தோன்றியுள்ளன. இதுதான், இந்தியா உள்பட சர்வதேச பங்குச் சந்தைகளிலிருந்து அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெறுவதற்கு முக்கியக் காரணம்.
அமெரிக்க பங்குச் சந்தைகள் வழங்கும் பாதுகாப்பான வருமானம் என்ற வாக்குறுதி முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்த்தது. இதனால் இந்தியா உள்பட பல சந்தைகள் அவற்றின் நிழலில் உள்ளன என்று தெரிவித்தார்.
ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறுகையில், டாலர் இன்டெக்ஸ் சரியும் போது, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் உத்தி மாறும் (மீண்டும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்வார்கள்). இது நடக்கும் ஆனால் எப்போது என்று எங்களால் கணிக்க முடியாது என்று தெரிவித்தார்.
கோடக் செக்யூரட்டிஸின் ஈக்விட்டி ரிசர்ச் தலைவர் ஸ்ரீகாந்த் சவுகான் கூறுகையில், இந்தியா மீது அமெரிக்கா விதித்த கட்டணங்கள், நிச்சயமற்ற ஜிடிபி வளர்ச்சி, டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மந்தம் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் எதிர்மறை அபாங்களில் சந்தை கவனம் செலுத்துகிறது. தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டால் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு நிலையற்றதாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications