குளோபல் சர்ஃபேசஸ் லிமிடெட் இயற்கையான கற்கள் மற்றும் குவார்ட்ஸ் கற்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதன் பொதுப் பங்கு வெளியீடானது மார்ச் 13 ஆன இன்று தொடங்கியுள்ளது. இது மார்ச் 15 அன்று முடிவடையவுள்ளது.
இந்த வெளியீட்டில் பங்கு விலை ஒரு பங்குக்கு 133 - 140 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வெளியீடு
இன்று கிரே மார்கெட்டில் சந்தையில் GMP விலையானது 35 ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் என் எஸ் இ மற்றும் பி எஸ் இ-யில் மார்ச் 23, 2023 அன்று பட்டியலிடப்படலாம் என தெரிகிறது.
இந்த பொதுப்பங்கு வெளியீட்டில் 85.20 லட்சம் புதிய ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இதில் ஆஃபர் பார் சேல் மூலமாக 25.5 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
ஏற்றுமதி அதிகரிக்கலாம்
இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதம் விற்பனைக் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இதன் ஏற்றுமதி வருவாய் விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த செப்டம்பர் காலாண்டிலேயே ஏற்றுமதி விகிதமானது கணிசமாக உயர்ந்திருந்தது.
லாபம் எவ்வளவு?
இதே இதன் எபிட்டா விகிதம் 2022ம் நிதியாண்டில் 21.97% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 31, 2022 உடன் முடிவடைந்த நிதியாண்டில் இதன் வருவாய் விகிதமானது, 198 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வரிக்கு பிந்தைய லாபம் 35 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே செப்டம்பர் 2022வுடன் முடிவடைந்த 6 மாதத்தில் வருவாய் 99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வரிக்கு பிந்தைய லாபம் 13.6 கோடி ரூபாயாக உள்ளது.
எப்போது ஒதுக்கீடு?
நடப்பு நிதியாண்டிலும் லாபம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஐபிஓ- முழுமையும் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ மூலம் 155 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது. இது மார்ச் 20 அன்று முதலீட்டாளர்களுக்கு யாருக்கு எவ்வளவு என ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. பொதுவாக பொதுப் பங்கு வெளியீடு என்பது முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications