90% பிரீமிய விலையில் பட்டியல்.. கோ பேஷன் கொடுத்த செம சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பொது பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் பேடிஎம்-மின் பங்கு வெளியீட்டுக்கு பிறகு அது தலைகீழாக மாறியுள்ளது. இப்படி பலத்த அச்சத்துக்கு மத்தியில் தான் இன்று கோ பேஷன் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டன.

பட்டியலிடப்படும் முன்பு வரையில் இது எப்படியிருக்குமோ? என்ற பதற்றத்தில் இருந்த முதலீட்டாளர்கள், பட்டியலிட்ட பிறகு சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர் எனலாம். ஏனெனில் தொடங்கத்திலேயே இருமடங்கு லாபம் கொடுத்துள்ளது.

ஐபிஓ விலை நிர்ணயம்

ஐபிஓ விலை நிர்ணயம்

கோ பேஷன் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலையானது 655 - 699 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. பங்கு வெளியீடு விலையை காட்டிலும், பட்டியலிடப்பட்டபோது 90% மேல் உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் நிதியினை 120 பிரத்யேக விற்பனையகங்கள் தொடங்கப்படும் எனவும், வணிக விரிவாக்கத்திற்காகவும், செயல்பாட்டு மூலதனமாகவும் பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

கோ பேஷன் பட்டியல் தொடக்கம்

கோ பேஷன் பட்டியல் தொடக்கம்

என்.எஸ்.இ-ல் இந்த பங்கின் விலையானது 89.85% பிரீமியம் விலையில், 1,310 ரூபாயாக பட்டியலிடப்பட்டது.
இதே பிஎஸ்இ-ல் 90.72% பிரீமியம் விலையானது, 1,316 ரூபாயாக தொடங்கியது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 6,748 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சந்தை மூலதனம் அதிகரிப்பு

சந்தை மூலதனம் அதிகரிப்பு

இதே என்.எஸ்.இ-ல் சந்தை மூலதனமானது, 6,664 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 54.36 லட்சம் பங்குகள் கைமாறின. இதன் மூலம் 670 கோடி ரூபாயாக டர்ன் ஓவர் ஆகியுள்ளது. இதே பி.எஸ்.இயில் 3.67 லட்சம் பங்குகள் கைமாறின. இதன் மூலம் 47.30 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஆகியுள்ளது.

லாபம் அதிகரிப்பு

லாபம் அதிகரிப்பு

கோ பேஷன் ஐபிஓ நவம்பர் 17 அன்று தொடங்கியுள்ளது. இதே நவம்பர் 22 அன்று முடிவடைந்தது. இதில் விலை நிர்ணயம் 655 - 690 ரூபாயாக இருந்தது. இந்த பங்கு பட்டியலில் 21 பங்குகள் ஒரு லாட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 14,490 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே இந்த பங்கில் 90% மேல் லாபம் கிடைத்துள்ளது.

சந்தை முடிவு

சந்தை முடிவு

இதே பங்கு சந்தைகளை பொறுத்தவரையில் இன்று காலை பலமான ஏற்றம் கண்ட நிலையில், முடிவில் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 195.71 புள்ளிகள் குறைந்து, 57,064.87 புள்ளிகளாகவும். இதே நிஃப்டி 70.75 புள்ளிகள் குறைந்து 16,987.20 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

முதல் நாள் கோ பேஷன் முடிவு

முதல் நாள் கோ பேஷன் முடிவு

இன்று காலை தொடக்கத்திலேயே 90% பிரீமிய விலையில் பட்டியலிடப்பட்ட கோ ஃபேஷன் நிறுவனம், முடிவில் சற்று குறைந்துள்ளது.
குறிப்பாக என்.எஸ்.இ-ல் 87.70% அதிகரித்து, 1253.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 1339.90 ரூபாயாகவும், குறைந்த விலை 1143.10 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் 81.54% அதிகரித்து, 1252.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 1341 ரூபாயாகவும், குறைந்த விலை 1144.15 ரூபாயாகவும் உள்ளது. இதே இதன் 52 வார உச்ச விலை 1341 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 690 ரூபாயாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+