சத்தமில்லாமல் ரூ.281 கோடிக்கு பங்குகளை வாங்கிய கோல்ட்மேன் சாக்ஸ்.. அந்த 2 பங்கு உங்ககிட்ட இருக்கா?.

கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. சந்தைகளின் இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது. தற்போது அவர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாக இந்த மாதம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. இந்த சூழ்நிலையில் சர்வதேச முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமெட்டோவில் மொத்தம் ரூ.281 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ப்ளாக் டீல் மூலம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் சோமெட்டோ நிறுவன பங்குகளை வாங்கியுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 3.85 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.4,176.25 என்ற விலையில் வாாங்கியுள்ளது. அதேசமயம் சோமெட்டோ நிறுவனத்தின் 60.07 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.199.50 என்ற விலையில் கையகப்படுத்தியுள்ளது. இது இந்திய பாதுகாப்பு மற்றும் உணவு விநியோகத் துறைகளில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஒரு மூலோபாய முதலீடாகும். இந்நிறுவனம் மொத்தம் ரூ.281 கோடிக்கு இந்த இரண்டு நிறுவன பங்குகளை கையகப்படுத்தி உள்ளது.

சத்தமில்லாமல் ரூ.281 கோடிக்கு பங்குகளை வாங்கிய கோல்ட்மேன் சாக்ஸ்.. அந்த 2 பங்கு உங்ககிட்ட இருக்கா?.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் சோமெட்டோ நிறுவன பங்குகளை கோல்ட்மேன் சாக்ஸ் வாங்கியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் விமானம் உள்பட பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்று.கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.6,957 கோடியும், நிகர லாபமாக ரூ.1,433 கோடியும் ஈட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.35 சதவீதம் உயர்ந்து ரூ.4,176ஆக இருந்தது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமெட்டோ 2024 டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.2,226 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.494 கோடி ஈட்டியிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சோமெட்டோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.07 சதவீதம் குறைந்து ரூ.201.50ஆக இருந்தது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை அதன் உச்சவிலையை காட்டிலும் சுமார் 33 சதவீதம் குறைவாக உள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சோமெட்டோ நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.304.50ஐ எட்டியது.

Story Written: Subramanian

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+