அடுத்த வருஷம் அம்பானி நிறுவனத்தின் வருவாய் அமோகமாக இருக்கும்.. கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு

இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முதல் தொலைத்தொடர்பு வரை பல்வேறு துறைகளின் வணிகங்களில் ஈடுபடுகிறது. முதலீட்டாளர்களால் அதிக விரும்பப்படும் பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவன பங்கும் ஒன்றாகும். கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் ஏற்றஇறக்கம் கலந்த கலவையாக இருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 7 சதவீதம் வளர்ச்சி கண்டது. இருப்பினும் அதற்கு முந்தைய 3 காலாண்டுகளிலும் இந்நிறுவனத்தின் லாபம் தொடர்ச்சியாக சரிவு கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2024-25ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருவாய் குறைந்திருப்பது, அந்நிறுவனத்தின் கச்சா எண்ணெய் முதல் ரசாயனம் வர்த்தகத்தின் செயல்பாட்டு திறனில் சரிவு, ரசாயன பிரிவுகளில் ஏற்பட்ட பலவீனம், பேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிரிவில் தேவை குறைவாக இருந்ததால் ரீடெய்ல் வணிக செயல்திறனும் கலவையாக இருந்தது போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. இது இந்நிறுவனத்தின் பங்கு விலை செயல்திறனையும் பாதித்துள்ளது. கடந்த 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.1,156க்கு சென்றது. இதனால் இப்பங்கில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்தனர். தற்போது இப்பங்கின் விலை சற்று ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

அடுத்த வருஷம் அம்பானி நிறுவனத்தின் வருவாய் அமோகமாக இருக்கும்.. கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.27 சதவீதம் குறைந்து ரூ.1,275ஆக இருந்தது. இந்த சூழ்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அடுத்த 2025-26ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி காணும் என்று தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. இது தொடர்பாக கோல்டமேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் செயல்பாட்டு மறுசீரமைப்பு மற்றும் மேக்ரோ பின்னணியும் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளதால், அடுத்த நிதியாண்டில் அந்த நிறுவனத்தின் வருவாய் மேம்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு குறித்து, வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை எந்தவித மாற்றமும் இன்றி தொடருகிறது. இப்பங்கின் தற்போதைய விலையிலிருந்து 28 சதவீதம் உயர்வு காணும் என்று கணித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கின. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை சுமார் 4 சதவீதம் வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. கோல்ட்மேன் சாக்ஸின் இந்த அறிக்கை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
னி நிறுவனத்தின் வருவாய் அமோகமாக இருக்கு

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+