இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் மிகப்பெரிய தொழிலதிபரும், பங்கு சந்தை முதலீட்டாளர்களில் ஒருவருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மிகப்பெரிய முதலீட்டாளர்.
பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகப்பெரிய முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதில் மிக பிரபலமானவர். இவர் ஒரு பங்கினை வாங்கினால், அந்த பங்கில் மிகப் பெரிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு மிகப் பிரபலமானவர் .
பங்குச் சந்தை என்றாலே பயந்து ஓடும் பலருக்கும் மத்தியில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தையில் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து. முதலீட்டாளர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முக்கிய பங்குகள்
இந்த நிலையில் இவர் முதலீடு செய்த ஐந்து பங்குகள் வரும் வாரங்களில் நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது போர்ட்ஃபோலியோ முதலீடுகள் எப்போதும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனிக்கப்படவேண்டிய பங்குகளாக இருந்து வருகின்றன.
நடப்பு நிதியாண்டில் இவரது போர்ட்ஃபோலியோ பங்குகள் பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை எனலாம். அதே சமயம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 22% மற்றும் 24% ஏற்றம் கண்ட நிலையில், ஜூன்ஜூன்வாலா வசம் உள்ள பங்குகள் அவ்வளவாக ஏற்றம் காணவில்லை எனலாம். எனினும் வரவிருக்கும் வாரங்களில் நல்ல ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
ஜூபிலன்ட் பார்மோவா
ஜூபிலன்ட் பார்மோவா நிறுவனம் நடப்பு நிதியாண்டில் சுமார் 33% சரிவினைக் கண்டுள்ளது. தற்போது இந்த பங்கின் விலை 600 ரூபாய் என்ற நிலையில் இருந்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து 290 ரூபாயை இழந்து, சுமார் 600 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் ஐ சி ஐ சி ஐ டைரக்ட் நிறுவனம், நீண்டகால நோக்கில் இதன் விலையானது 850 ரூபாயை தொடலாம் என்ற இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. இதே மோதிலால் நிறுவனம் 960 ரூபாய் என்ற இலக்கினை அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கில் ஜூன் ஜூன்வாலா வசம் 6.3% பங்குகள் உள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேன்ஞ்
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேன்ஞ் நிறுவனமானது நடப்பு ஆண்டில் சுமார் 9% சரிவினைக் கண்டுள்ளது. இந்த பங்கானது ஒரு பங்கிற்கு 160 ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. தற்போது இது 1,590 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் ஆகி வரும் நிலையில், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் இலக்கினை 1,890 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் 4.9% பங்குகள் ஜூன் ஜூன்வாலா வசம் உள்ளது.
ராலிஸ் இந்தியா
ராலிஸ் இந்தியா நிறுவனம் நடப்பாண்டில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. எனினும் இது வரவிருக்கும் மாதங்களில் ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது 284 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வரும் நிலையில், ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் இதன் இலக்கினை 365 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வசம் 9.9% பங்குகளை வைத்துள்ளார்.
லூபின் லிமிடெட்
நடப்பாண்டில் லூபின் லிமிடெட் நிறுவனம் அதன் 8% சந்தை மூலதனத்தினை இழந்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது 920 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நடப்பாண்டில் இந்த பங்கின் விலையானது 80 ரூபாய் சரிவைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தரகு நிறுவனங்கள் இதன் விலையானது 1300 ரூபாய் என்றும், 1,400 ரூபாய் வரை செல்லலாம் என்றும் கணித்துள்ளன. இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா வசம் 1.6% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வொக்கார்ட் நிறுவனம்
நடப்பு ஆண்டில் வொக்கார்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது 22% குறைந்துள்ளது. தற்போது இது 425 ரூபாய் என்ற லெவலில் வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது தற்போது 118 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 2.3% பங்குகள் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது
***மேற்கண்ட பங்குகள் மற்றும் இலக்குகள் அனைத்தும் தரகு நிறுவனங்கள் கணிதக் கணிப்புகளாகும். ஆக இவற்றில் முதலீடு செய்யும் முன்னர் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, பின்னர் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications