மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதியன்று 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக மத்திய அரசாங்கம் மத்திய பட்ஜெட்டில் தேசத்தின் உயிர் நாடியாக விளங்கும் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைக்கு முன்னுரிமை கொடுப்பது வாடிக்கையான ஒன்று.
வேளாண் துறை நாட்டின் 140 கோடி மக்களின் பசியை போக்கி வருகிறது.நம் நாட்டின் மொத்த பணியாளர்களில் 45 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 3.5 லட்சம் டாலர் பொருளாதாரத்தில் வேளாண் துறை 15 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இதனால் மத்திய அரசாங்கம் வேளாண் துறைக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும்.

கடந்த ஆண்டு தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீட்டை 15 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான ஒதுக்கீடு ரூ.1.75 லட்சம் கோடியாக அதிகரி்க்கும்.
உள்நாட்டில் உணவு தானியங்கள் விநியோகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல மத்திய அரசின் நோக்கம். 2030ம் ஆண்டுக்குள் வேளாண் ஏற்றுமதியை தற்போதைய அளவான 5,000 கோடி டாலரிலிருந்து 8,000 கோடி டாலராக உயர்த்துவதற்கு போதுமான அளவு உபரியை உருவாக்கவும் மத்திய அரச முயற்சிகளை எடுத்து வருகிறது.
எதிர்வரும் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய விவசாய கடன்களுக்கான உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம். தற்போது ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ.3 லட்சம் மட்டுமே மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கப்படுகிறது.
பயிர் காப்பீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகலாம். 2030ம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியை 3 கோடி டன்னாக உயர்த்தவும், அடுத்த 5 ஆண்டுகளில் மீன்வளத் துறையில் 900 கோடி டாலர்களை முதலீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2027ம் ஆண்டு வரை உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.10,900 கோடி ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் அடங்கும். இவ்வாறு தெரிவித்தன.
பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும் கூடுதல் நிதியை, அதிக மகசூல் தரும் விதை வகைகளை உருவாக்குதல், சேமிப்பு மற்றும் விநியோக உள்கட்டமைப்பை அதிகரித்தல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக செலவிடப்படும் என கூறப்படுகிறது.
Story Written by: Subramanian
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications