நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசி தொடர்ந்து தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இன்சூரன்ஸ் என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வரக்கூடியது எல்ஐசி நிறுவனம் தான்.
மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த எல்ஐசி நிறுவனத்தில் அரசு தனக்கு சொந்தமான பங்குகளை படிப்படியாக விற்பனை செய்து வருகிறது. தற்போது எல் ஐ சி நிறுவனத்தில் மத்திய அரசு 96.50 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு ஐபிஓ மூலமாக எல்ஐசி நிறுவனத்தில் தன்னுடைய பங்குகளை விற்பனை செய்தது. அதாவது 3.50 சதவீத பங்குகளை விற்று 21,000 கோடி ரூபாயை மத்திய அரசு திரட்டியது.

இந்த நிலையில் நிதி சேவை துறை செயலாளர் நாகராஜு அடுத்த நிதியாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை மேலும் விற்பனை செய்து அரசு நிதி திரட்ட உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதாவது இந்த நிறுவனத்தில் தன்னுடைய பங்குகளை மேலும் குறைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.
திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார. மே 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பனை செய்தபோது ஒரு பங்கின் விலை 902 ரூபாயிலிருந்து 949 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தொடக்கத்தில் எல்ஐசி நிறுவன பங்குகள் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாமல் இருந்தது பின்னர் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்தது.
இன்றைய தினம் எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 837 ரூபாயாக இருந்து வருகிறது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால அதிகபட்ச மதிப்பு 980 ரூபாயாகவும் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 715 ரூபாயாகவும் இருக்கிறது. நேற்றுடன் ஒப்பிடும்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு என்று சுமார் 4.5% அதிகரித்து இருக்கிறது.
மத்திய அரசு அடுத்த நிதி ஆண்டில் கூடுதலாக lic நிறுவனத்தில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வதாக வெளியான தகவலே எல்ஐசி பங்கு மதிப்பு உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. மத்திய அரசு 2027 மே மாதத்திற்குள் எல்ஐசி நிறுவனத்தில் தன்வசம் இருக்கும் 6.50 சதவீத பங்குகளை விற்பனை செய்தாக வேண்டும்.
எனவே அடுத்தடுத்து எல்ஐசி நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பான அறிவிப்புகளை அரசு வெளியிடப் போகிறது.எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மூல தன மதிப்பு 5 லட்சம் கோடியாக இருக்கிறது. 2026ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 32 சதவீதம் உயர்ந்து 10,000 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. 1.49% ஈவுத்தொகை தரக்கூடிய பங்காகவும் இது இருக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications