மத்திய அரசு நாட்டின் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது
மத்திய அரசு நாட்டின் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் அதிகளவிலான நிதி தேவையில் தற்போது மத்திய அரசு உள்ளது.
இந்த நிதி தேவையைத் தீர்க்கும் வகையில் 2016-17 பட்ஜெட் அறிக்கையில் அரசு செய்துள்ள பங்குகளைக் குறைக்கவும் புதிய அரசு நிறுவனங்களைப் பங்குச்சந்தகையில் பட்டியலிடவும் முடிவு செய்தது.
2% பங்குகள் விற்பனை
இதன்படி மத்திய அரசு ஐடிசி நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டில் 2 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு 6,700 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளது.
எல்ஐசி நிறுவனம்
மத்திய அரசின் கையில் இருந்து ஐடிசி நிறுவனப் பங்குகளை யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வாயிலாக எல்சிஎஸ் நிறுவனம் வாங்கிக்கொண்டது. ஒரு பங்கு 275.85 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தள்ளுபடி விலை
மேலும் மத்திய அரசு, ஐடிசி நிறுவனத்தின் ஒரு பங்கை 0.15 பைசா குறைவாக விற்பனை செய்யுள்ளது. திங்கட்கிழமை வர்த்தக முடிவில் இதன் மதிப்பு 276 ரூபாய்.
பங்குச்சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.15 புள்ளிகள் உயர்ந்து 276.95 ரூபாய் வரை உயர்ந்தது.
45,500 கோடி ரூபாய்
மத்திய அரசு, பங்கு விற்பனையின் மூலம் சுமார் 45,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் திட்டத்தைத் தீட்டியுள்ளது. இத்திட்டத்தில் இதுவும் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
51 நிறுவனங்கள்
மத்திய அரசு இன்றைய நாள் வரை சுமார் 51 நிறுவனப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்துள்ளது. மேலும் தனது நிதி திரட்டும் திட்டத்தை 3 வருடத்திற்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications