ஜிஆர் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் நிறுவனம் சிவில் கட்டுமான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் இடம்பெற்றுள்ள ஒரு நிறுவனம். மேலும், ஜிஆர் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.12.50 இடைக்கால டிவிடெண்ட் வழங்க உள்ளதாக அறிவித்தது. இந்நிறுவனத்தின் வரலாற்றில் இதுதான் முதல் இடைக்கால டிவிடெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஆர் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2025 மார்ச் 7ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பங்குதாரர்களுக்கு 2024-25ம் நிதியாண்டுக்கு ரூ.5 முக மதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.12.50 வழங்குவதாக இயக்குனர்கள் குழு அறிவித்தது என்று தெரிவித்தது. டிவிடெண்ட் சதவீதம் 250 சதவீதமாகும். மார்ச் 13ம் தேதியை டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 ஜூலை 19ம் தேதியன்று ஜிஆர் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் நிறுவன பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு ரூ.1,700 என்ற விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. இது பங்கு வெளியீட்டு விலையான ரூ.837ஐ காட்டிலும் 103.11 சதவீதம் அதிகமாகும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஜிஆர் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் பங்கு விலை 30 சதவீதம் சரிவடைந்துள்ளது.கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 38 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் இப்பங்கின் விலை 36 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 31 சதவீதம் குறைந்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.48 சதவீதம் குறைந்து ரூ.988.50ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications